ரெடியா? கைநிறைய சம்பளம்.. சென்னை ஐஐடியில் குவிந்திருக்கும் வேலைவாய்ப்பு.. முழு விபரம் இதோ

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை ஐஐடியில் ஜுனியர் அசிஸ்டென்ட் உள்பட 10 பிரிவுகளில் காலியாக உள்ள 64 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 10ம் வகுப்பு முதல் டிகிரி, மாஸ்டர் டிகிரி, டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு கைநிறைய சம்பளம் வழங்கப்பட உள்ளது.

இந்தியாவில் முன்னணி கல்வி நிறுவனங்களாக ஐஐடி செயல்பட்டு வருகின்றன. இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இந்த கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. சென்னையிலும் ஐஐடி இயங்கி வருகிறது.

Chennai IIT Recruitment 2024 for 64 post including Junior Assistant

இந்நிலையில் தான் சென்னை ஐஐடியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின் முக்கிய விபரங்கள் வருமாறு:

காலியிடங்கள்: சென்னை ஐஐடியில் தலைமை செக்யூரிட்டி ஆபிசர் (Chief Security Officer) பணிக்கு ஒருவர், அசிஸ்டென்ட் ரிஜிஸ்ட்ரர் (Assistant Registrar) பணிக்கு 2 பேர், ஸ்போர்ட்ஸ் ஆபிசர் பணிக்கு ஒருவர், ஜுனியர் சூப்பிரண்டு பணிக்கு 9 பேர், அசிஸ்டென்ட் செக்யூரிட்டி ஆபிசர் பணிக்கு 4 பேர், பிசிக்கல் டிரெய்னிங் இன்ஸ்ட்ரக்டர் பணிக்கு 3 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலும் ஜுனியர் அசிஸ்டென்ட் பணிக்கு 30 பேர், சமையல் பணிக்கு 2 பேர், டிரைவர் பணிக்கு பணிக்கு 2 பேர், காவலாளி பணிக்கு 10 பேர் என மொத்தம் 64 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

வயது வரம்பு: தலைமை செக்யூரிட்டி ஆபிசர் பணிக்கு 50 வயதுக்குள்ளும்,அசிஸ்டென்ட் ரிஜிஸ்ட்ரர் ஸ்போர்ட்ஸ் ஆபிசர் பணிகளுக்கு 45 வயதுக்குள்ளும், ஜுனியர் சூப்பிரண்டு, அசிஸ்டென்ட் செக்யூரிட்டி ஆபிசர்,பிசிக்கல் டிரெய்னிங் இன்ஸ்ட்ரக்டர் பணிகளுக்கு 32 வயதுக்குள்ளும், ஜுனியர் அசிஸ்டென்ட், சமையல் பணி, டிரைவர், காவலாளி பணிகளுக்கு 27 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். மேலும் அரசு விதிகளின் படி வயது தளர்வும் வழங்கப்படும்.

கல்வி தகுதி: தலைமை செக்யூரிட்டி ஆபிசர், அசிஸ்டென்ட் ரிஜிஸ்ட்ரர் பணிக்கு மாஸ்டர் டிகிரி, ஸ்போர்ட்ஸ் ஆபிசர் பணிக்கு டிகிரி, மாஸ்டர் டிகிரி முடித்திருக்க வேண்டும். ஜுனியர் சூப்பிரண்டு, அசிஸ்டென்ட் செக்யூரிட்டி ஆபிசர் பணிக்கு டிகிரி, பிசிக்கல் டிரெய்னிங் இன்ஸ்ட்ரக்டர் பணிக்கு பிபிஎட் முடித்திருக்க வேண்டும். ஜுனியர் அசிஸ்டென்ட் பணிக்கு டிகிரி, சமையல் பணிக்கு டிப்ளமோ/பிஎஸ்டி ஹோட்டல் மேனேஜ்மென்ட் மற்றும் கேட்டரிங் டெக்னாலஜி, டிரைவர் பணிக்கு 12ம் வகுப்பு, காவலாளி பணிக்கு 10ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.

மாத சம்பளம்: தலைமை செக்யூரிட்டி ஆபிசர் பணிக்கு மாதம் Paymatrix லெவல் 12, அசிஸ்டென்ட் ரிஜிஸ்ட்ரர் ஸ்போர்ட்ஸ் ஆபிசர் பணிக்கு லெவல் - 10, ஜுனியர் சூப்பிரண்டு, அசிஸ்டென்ட் செக்யூரிட்டி ஆபிசர்,பிசிக்கல் டிரெய்னிங் இன்ஸ்ட்ரக்டர் பணிக்கு லெவல்-6, ஜுனியர் அசிஸ்டென்ட், சமையல் பணி, டிரைவர் பணிக்கு லெவல்-3, காவலாளி பணிக்கு லெவல்- 1 என்ற அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்பிப்பது எப்படி: தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் iitm.ac.in இணையதளம் மூலம் வரும் 12ம் தேதி முதல் மார்ச் மாதம் 12ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்ப கட்டணமாக ரூ.500 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், பெண்களுக்கு விண்ணப்ப கட்டணம் என்பது கிடையாது. இப்படி விண்ணப்பம் செய்வோர் எழுத்து தேர்வு, திறனறி தேர்வு, டிரேட் தேர்வு, நேர்க்காணல் முறையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+