லயோலா கல்லூரியில் வேலை.. 40 பணியிடங்கள்.. 10 ஆம் வகுப்பு கல்வி தகுதிதான்.. உடனே அப்ளை பண்ணுங்க
சென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரியில் காலியாக உள்ள 40 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. டைப்பிஸ்ட், அலுவலக உதவியாளர், ரெக்கார்டு கிளர்க் உள்ளிட்ட பணியிடங்கள் உள்ளன. இதற்கு எப்படி விண்ணப்பிப்பது? யார் யார் விண்ணப்பிக்க முடியும் என்பது பற்றிய முழு விவரங்களை இங்கே பார்க்கலாம்.
சென்னை லயோலா கல்லூரியில் பேராசிரியர் அல்லாத பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள லயோலா கல்லூரி சென்னையின் மிகவும் பிரபலமான கல்லூரிகளில் ஒன்றாகும். இந்த கல்லூரியில் காலியாக இருக்கும் டைப்பிஸ்ட், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் எத்தனை பணியிடங்கள் உள்ளன? கல்வி தகுதி என்ன? வயது வரம்பு உள்ளிட்டவை பற்றிய விவரங்களை இங்கே பார்க்கலாம்.

பணியிடங்கள் விவரம்:
டைப்பிஸ்ட் - 02
ஆய்வக உதவியாளர் - 09
ரெக்கார்டு கிளர்க் - 03
அலுவலக உதவியளர் - 08
தூய்மை பணியாளர் - 06
வாட்ச்மேன் - 02
வாட்டர்மேன் - 02
தோட்ட பராமரிப்பாளர் - 02
Scavenger - 02
மார்க்கர் - 03
ஸ்டோர் கீப்பர் - 01
என மொத்தம் 40 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
கல்வி தகுதி: டைப்பிஸ்ட் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் டைப்பிங்க் தெரிந்து இருப்பது அவசியம். ஆய்வக உதவியாளர், ரெக்கார்டு கிளர்க் பணிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருந்தால் போதும்.இதர அனைத்து பணியிடங்களுக்கும் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.
வயது வரம்பு: விண்ணப்பதாரர்களுக்கு வயது உச்ச வரம்பாக 30 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எஸ்.சி/எஸ்.டி பிரிவினர் 35 வயது வரையிலும், பிசி/எம்பிசி பிரிவினர் 32 வயது வரையும் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு முறை: தகுதியான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு நேர்முகத்தேர்வு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆஃப்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
"The Secretary & Correspondent, Loyola College,
Chennai - 600 034."
என்ற முகவரிக்கு தங்களின் விண்ணப்பித்தினை அனுப்பலாம்.
விண்ணப்பதாரர்கள் பயோ டேட்டாவை
[email protected] என்ற முகவரிக்கும் அனுப்பலாம். விண்ணப்பிக்க அவகாசம் தொடங்கிய நாள்: 24.01.2025, விண்ணப்பிக்க கடைசி நாள்: 02.02.2025
கூடுதல் தகவல்களை விண்ணப்பதார்கள் https://www.loyolacollege.edu/ இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
-
மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் நெல்லையில் வேலை! 82 காலியிடங்கள்.. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications