Chennai Metro Job: சென்னை மெட்ரோவில் வேலை.. லட்சத்தில் சம்பளம்.. என்ஜினியரிங் முடித்தவர்களுக்கு யோகம்!
சென்னை: சென்னை மெட்ரோ ரயில் (Chennai Metro Job) நிறுவனத்தில் பணிபுரிய அருமையான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலாளர் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. என்ஜினியரிங் முடிந்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். சம்பளத்தை பொறுத்தவரை ஒரு லட்சம் வரை வழங்கப்படும். வரும் 23 ஆம் தேதி வரை இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும்.
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பது, வேகமான மற்றும் பாதுகாப்பான பொதுப் போக்குவரத்தை வழங்குவதை நோக்கமாக கொண்டு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் செயல்படுகிறது. மத்திய அரசு மற்றும் தமிழக அரசு கூட்டாக சேர்ந்து கடந்த 2007 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது இந்த நிறுவனம்.

பணியிடங்கள் விவரம்:
தற்போது சென்னை மெட்ரோ நிறுவனத்தில் மேலாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. தலைமை ஜெனரல் மேலாளர், ஜெனரல் மேலாளர், கூடுதல் ஜெனரல் மேலாளர், இணை ஜெனரல் மேலாளர், டெபியூட்டி மேலாளர், மேலாளர், உதவி மேலாளர் உள்ளிட்ட பதவிகளில் மொத்தம் 19 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
கல்வித் தகுதி:
கல்வித் தகுதியினை பொறுத்தவரை சிவில் இன்ஜினியரிங் பிரிவில் பி.இ, பி.டெக் முடித்தவர்கள் விண்ணப்பிக்க முடியும். மேலும் துறை சார்ந்த பிரிவில் 15 ஆண்டுகள் பணி அனுபவத்தைப் பெற்றிருக்க வேண்டும்.
மேலாளர், துணை மேலாளர் மற்றும் உதவி மேலாளர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 7, 4, 2 ஆகிய ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். கல்வித் தகுதி குறித்த முழு விவரங்களை தேர்வு அறிவிப்பில் தெரிந்துகொள்ளலாம்.
தேர்வு முறை
இது முற்றிலும் ஒப்பந்த பணியிடங்கள் ஆகும். தேர்வு முறையை பொறுத்தவரை நேர்காணல் மற்றும் மருத்துவ பரிசோதனை மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். CMRL விதிமுறைகளின் அடிப்படையில் மருத்துவத் தகுதியை பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் எவ்வளவு
* தலைமை ஜெனரல் மேலாளர் பதவிக்கு - ரூ.2,70,000 சம்பளம் வழங்கப்படும்.
* ஜெனரல் மேலாளர் பதவிக்கு - ரூ.2.25 லட்சம் சம்பளம் வழங்கப்படும்.
* கூடுதல் ஜெனரல் மேலாளர் பதவிக்கு - ரூ.1.60 லட்சம் சம்பளம் வழங்கப்படும்.
* இணை ஜெனரல் மேலாளர், துணை ஜெனரல் மேலாளர் பதவிக்கு - ரூ.1.45 லட்சம், ரூ.1.25 லட்சம் வழங்கப்படும்.
* மேலாளர், துணை, உதவி மேலாளர் பதவிகளுக்கு - ரூ.62 ஆயிரம் - ரூ.85 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி?
ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் https://chennaimetrorail.org/ என்ற இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணமாக ரூ.300 செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி மாணவர்கள் ரூ.50 செலுத்த வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் 23.02.2026 ஆகும். நேர்காணல் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
தேர்வு அறிவிப்பினை படிக்க: https://chennaimetrorail.org/
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications