நோ எக்ஸாம்.. ரூ.60,000 வரை மாதஊதியம்! சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தில் பணியாற்ற நல்ல வாய்ப்பு
சென்னை: சிஎம்டிஏ எனும் சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமத்தில் காலியாக உள்ள பணியிடங்களை தேர்வு இன்றி நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.40 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
சிஎம்டிஏ எனும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் செயல்பட்டு வருகிறது. சென்னை நகரின் கட்டமைப்புகளை உருவாக்குவதில் இது முக்கிய பங்காற்றி வருகிறது. இந்நிலையில் தான் சிஎம்டிஏவில் காலியாக உள்ள 38 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:

டிரான்ஸ்போர்ட் பிளானர்: டிரான்ஸ்போர்ட் பிளானர் (Transport Planner) பணிக்கு ஒருவர் தேர்வு செய்யப்பட உள்ளனர். டிரான்ஸ்போர்ட் பிளானிங் பிரிவில் முதுகலை படிப்பை முடித்து 2 ஆண்டு பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். அதேபோல் என்வைரான்மென்டல் பிளானர் (Environmental Planner) பணிக்கு ஒருவர் தேர்வு செய்யப்பட உள்ளார். இதற்கு Environmental Planning பிரிவில் முதுகலை படிப்பை முடித்திருக்க வேண்டும்.
அர்பன் டிசைனர்: அர்பன் டிசைனர் (Urban Designer) இந்த பணிக்கு ஒருவர் தேர்வு செய்யப்பட உள்ளார். இதற்கு விண்ணப்பத்தாரர்கள் அர்பன் டிரைன் பிரிவில் முதுகலை படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும் ஹைட்ரோலாஜிஸ்ட் (Hydroloist) இந்த பணிக்கு ஒருவர் தேர்வு செய்யப்பட உள்ளார். விண்ணப்பத்தாரர்கள் அர்பன் டிரைன் பிரிவில் முதுகலை படிப்பை முடித்திருக்க வேண்டும்.
ஜியாலஜிஸ்ட்: Geologist பணிக்கு ஒருவர் தேர்வு செய்யப்பட உள்ளார். விண்ணப்பம் செய்ய விரும்புவோர் Geology பிரிவில் முதுகலை படிப்பை முடித்திருக்க வேண்டும். இதுதவிர அர்பன் பிளானர் (சிஎம்டிஏ)/அர்பன் பிளானர் (டிசிசிபி) பணிக்கு 33 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கு அர்பன் பிளானிங் பிரிவில் முதுகலை படிப்பை முடித்திருக்க வேண்டும்.
மாதசம்பளம்: இந்த பணிகளுக்கு தேர்வாகும் அனைவருக்கும் மாதம் குறைந்தபட்சம் ரூ.40 ஆயிரமும், அதிகபட்சமாக ரூ.60 ஆயிரமும் சம்பளமாக வழங்கப்படும். இதில் ஹைட்ரோலாஜிஸ்ட் பணிக்கு குறைந்தபட்சம் 2 ஆண்டு அனுபவம் வேண்டும். மீதமுள்ள பணிகளுக்கு அனுபவம் இல்லாவிட்டாலும் கூட விண்ணப்பம் செய்யலாம். ஆனால் அனுபவம் இருந்தால் அது பிளஸ் பாயிண்டாக இருக்கும்.
விண்ணப்பிப்பது எப்படி: தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் டிசம்பர் 29ம் தேதி மதியம் 3 மணிக்குள் https://forms.gle/nNq1G43sr24CaYVF6 இந்த லிங்க் மூலம் விண்ணப்பம் செய்ய வேண்டும். பணிக்கு விண்ணப்பம் செய்வோர் நேர்க்காணல் முறையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். இவ்வாறு தேர்வு செய்வோர் 18 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரை ஒப்பந்த அடிப்படையில் பணியில் அமர்த்தப்படுவார்கள்.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
பணிக்கு விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications