தேர்வு இல்லை.. கைநிறைய சம்பளம்.. 12 முடித்தாலே சென்னையில் டேட்டா என்ட்ரி வேலை.. ஐசிஎம்ஆர் அழைப்பு
சென்னையில் உள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் கீழ் இயங்கும் தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் காலியாக உள்ள ப்ராஜெக்ட் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
சென்னை: சென்னையில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தேசிய தொற்றுநோயியல் நிறுவனம் செயல்பட்டு வரும் நிலையில் இங்கு காலியாக உள்ள டேட்டா என்ட்ரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி பிளஸ் 2 முடித்தவர்கள் விண்ணப்பம் செய்து ரூ.17 ஆயிரம் சம்பளத்தில் பணியை பெற முடியும்.
சென்னை அய்யப்பாக்கம் தமிழ்நாடு ஹவுசிங் போர்டில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தேசிய தொற்றுநோயியல் நிறுவனம் (National Institute of Epidemology or NIE) அமைந்துள்ளது.
இங்கு NACO - HIV சென்டினல் சர்வேலன்ஸ் ப்ரொஜெக்ட் மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்கு ப்ராஜெக்ட் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:

காலியிடங்கள் எவ்வளவு?
சென்னையில் உள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் கீழ் இயங்கும் தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் காலியாக உள்ள ப்ராஜெக்ட் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பிரிவில் 10 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. சென்னையிலேயே பணியமர்த்தப்படுவார்கள்.

வயது வரம்பு என்ன?
விண்ணப்பத்தாரர்கள் பொதுபிரிவினராக இருந்தால் 25 வயதுக்குள் இருக்க வேண்டும். ஓபிசி பிரிவினராக இரந்தால் 28 வயதுக்குள்ளும் எஸ்சி பிரிவினராக இருந்தால் 30 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும் என பணி தொடர்பான அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மாத சம்பளம் என்ன?
இந்த பணி முழுக்க முழுக்க தற்காலிகமானது. 3 மாதத்துக்கு பிறகு பணியை பொறுத்து நீட்டிப்பு செய்யப்படும். பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் அதிகபட்சமாக ரூ.17 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படும்.

கல்வி தகுதி என்ன?
பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 12ம் வகுப்பு முடித்திருப்பதோடு, டைப்ரைட்டிங் பயிற்சியில் தேர்ச்சி பெற்று சான்று வைத்திருக்க வேண்டும். அதன்படி ஆங்கிலத்தில் லோவர்/ஹையர் முடித்திருக்க வேண்டும். மேலும் ஒரு மணிநேரத்தில் 8 ஆயிரம் எழுத்துக்கள் டைப் செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். எம்எஸ் எக்ஸல், எம்எஸ்வேர்ட், எம்எஸ் பவர்பாயிண்ட் உள்ளிட்டவற்றை அறிந்திருக்க வேண்டும்.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
-
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
மத்திய அரசின் நிலக்கரி நிறுவனத்தில் வேலை! 660 காலியிடங்கள்! என்ஜினியரிங் முடிச்சவங்களுக்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications