மாதஊதியம் ரூ.56,900..10ம் வகுப்பு முடித்தவரா நீங்க? சென்னை என்ஐடிடிடிஆர் நிறுவனத்தில் சூப்பர் வேலை!
சென்னை: சென்னையில் உள்ள தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 10ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பம் செய்வதன் மூலம் மாதம் குறைந்தபட்சம் ரூ.18,000 முதல் அதிகபட்சமாக ரூ.56,900 வரையிலான சம்பளத்தில் வேலையை பெற முடியும்.
மத்திய கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் சென்னை தரமணியில் தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (National Institute Of Technical Teachers Training And Research or NITTTR) செயல்பட்டு வருகிறது. இங்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அந்த அறிவிப்பின் முக்கிய விபரங்கள் வருமாறு:

சென்னை தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் மல்டி டாஸ்க்கிங் ஸ்டாப் (Multi Tasking Staff)பிரிவில் காலியாக உள்ள 34 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. பணிக்கு தேர்வு செய்யப்படுவோர் வேலை செய்யும் இடத்தில் தூய்மையை பராமரித்தில், ஆவண பரிமாற்றம், ஆவண பாதுகாப்பு, மெயில் அனுப்புதல், ஜெராக்ஸ் எடுத்தல், அலுவலகத்தில் தினமும் நடக்கும் பணிக்கான டைரியை பராமரித்தல் உள்ளிட்ட பிற பணிகளை செய்ய வேண்டி இருக்கும்.
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் அரசு, அரசு உதவி பெறுவது அல்லது சுயாட்சியுடன் இயங்கும் கல்வி நிறுவனங்களில் பணியாற்றி ஓராண்டு அனுபவம் கொண்டிருக்க வேண்டும். அதோடு 35 வயதுக்குள் இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பத்தாரர்கள் 10 ம் வகுப்பு அல்லது அதற்கு நிகரான படிப்புகளை முடித்திருக்க வேண்டும் என பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் குறைந்தபட்சமாக ரூ.18,000, அதிகபட்சமாக ரூ.56,900 வரை சம்பளம் வழங்கப்படும். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் https://www.nitttrbpl.ac.in/ இணையதளம் மூலம் ஜூலை மாதம் 17 ம் தேதி மாலை 5.30 மணிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும். ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் +91 94451 41467, 044 22545436 ஆகிய எண்களையும், [email protected] எனும் இ-மெயிலை தொடர்பு கொள்ளலாம்.
மேலும் விண்ணப்பத்துக்கான ஹார்ட் காபி மற்றும் சுயஒப்பமிட்ட சான்றிதழ்களை ஸ்பீட் போஸ்ட், கூரியர் மூலம் ஜூலை மாதம் 31ம் தேதி மாலை 5.30 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். இந்த விண்ணப்பங்களை அனுப்பும்போது கவரின் மீது ‛‛APPLICATION FOR THE POST OF Multi Tasking Staff'' என எழுதி The Director, National Institute Of Technical Teachers Training and Research, Tharamani, Chennai - 600 113 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications