ரெடியா? மாதம் ரூ.92,300 வரை சம்பளம்.. சென்னையிலேயே சூப்பர் வேலை.. அழைக்கும் என்ஐடிடிடிஆர்!
சென்னை: சென்னையில் உள்ள தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள டெக்னிக்கல் அசிஸ்டென்ட் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் குறைந்தபட்சமாக ரூ.19,000 முதல் அதிகபட்சமாக ரூ.92,300, வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
மத்திய கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் சென்னை தரமணியில் தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (National Institute Of Technical Teachers Training And Research or NITTTR) செயல்பட்டு வருகிறது.

இங்கு டெக்னீக்கல் அசிஸ்டென்ட் எனும் பொறுப்பில் 3 பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அந்த அறிவிப்பின் முக்கிய விபரங்கள் வருமாறு:
டெக்னீக்கல் அசிஸ்டென்ட் குரூப் II (ஜூனியர் எலக்ட்ரானிக்ஸ் டெக்னீசியன்) பணிக்கு ஒருவர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இ்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் டிப்ளேமா எலக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேசன் என்ஜினீயரிங் படிப்பை முடித்து 10 ஆண்டு பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். இல்லாவிட்டால் பிஇ, பிடெக் பிரிவில் எலக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேசன் என்ஜினீயரிங் படிப்பை முடித்து 5 ஆண்டு பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
அதாவது Educational Video Programmes மற்றும் ஆடியோ, வீடியோ கருவிகளை கையாளுதல், ஆடியோ, வீடியோ எடிட்டிங் சாப்ட்வேர், கிராபிக்ஸ் மற்றும் அனிமேஷன், லைவ் ஸ்ட்ரிமிங்க் சாப்ட்வேர் உள்ளிட்டவற்றில் பணியாற்றிய அனுபவம் கொண்டிருக்க வேண்டும். இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் குறைந்தபட்சமாக ரூ.29,200 அதிகபட்சமாக ரூ.92,300 வரை சம்பளம் வழங்கப்படும். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். இந்த பணியிடம் பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அடுத்தததாக டெக்னீக்கல் அசிஸ்டென்ட் குரூப் II (கிராபிக் அசிஸ்டென்ட்) பணிக்கு ஒருவர் தேர்வு செய்யப்பட உள்ளார். இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.29,200 முதல் ரூ.92,300 வரை சம்பளம் வழங்கப்படும். இந்த பொறுப்புக்கு விண்ணப்பம் செய்வோர் டிப்ளமோ பிரிவின் Fine Arts அல்லது Commercial Arts படிப்பை முடித்து 10 ஆண்டு பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். இல்லாவிட்டால் பிஇ, பிடெக் பிரிவில் கிராபிக்ஸ், விசுவல் டிசைன் படிப்பை முடித்து 5 ஆண்டு அனுபவம் கொண்டிருக்க வேண்டும். இந்த பொறுப்பு விண்ணப்பம் செய்வோரும் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். இந்த பணி என்பது லோகோ மோட்டார் (ஆர்த்தோ) பிரச்சனை உள்ளவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
3வது பிரிவு என்பது ஜூனியர் செயலக உதவியாளர் (இந்தி தட்டச்சர்) (JUNIOR SECRETARIAT ASSISTANT -Hindi Typist) இந்த பணிக்கும் ஒருவர் தேர்வு செய்யப்பட உள்ளனார். டிகிரி படிப்பை முடித்து 1 நிமிடத்துக்கு 30 இந்தி வார்த்தைகள் டைப் செய்ய கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். மேலும் அரசு, தனியார் நிறுவனத்தில் ஓராண்டு பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதசம்பளமாக ரூ.19,900 முதல் ரூ.63,200 வரை வழங்கப்படும். இதற்கு விண்ணப்பம் செய்வோர் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். இந்த பணிக்கு காது கேட்பதில் குறைபாடு உள்ளவர்கள் விண்ணப்பம் செய்ய வேண்டும்.
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் அக்டோபர் மாதம் 25ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பத்தாரர்கள் https://www.nitttrc.ac.in/ இணையதளம் சென்று வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பில் உள்ள படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தியிட்டு உரிய ஆவணங்களின் நகல்களை இணைத்து தபாலில் அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பங்களை Director, National Institute of Technical Teachers Training and Research (NITTTR), Taramani, Chennai - 600 113, Tamilnadu, India எனும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் பதிவிறக்கம் செய்ய Click Here
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு












Click it and Unblock the Notifications