ரெடியா? கைநிறைய சம்பளம்.. சென்னையிலேயே அரசு வேலை.. அழைக்கும் சிபிசிஎல்.. செம வாய்ப்பு
சென்னை: சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணிக்கு தேர்வாகும் நபர்களுக்க கைநிறைய சம்பளம் வழங்கப்பட உள்ள நிலையில் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் ஆகஸ்ட் 2ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும்.
இந்தியாவில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களின் ஒன்றாக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட்டின் கீழ் சிபிசிஎல் எனும் சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (CPCL or Chennai Petroleum Corporation Limited) செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் தான் சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:
இந்த பணிகளுக்கு விண்ணப்பம் செய்வோர் 26 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினர், முன்னாள் படை வீரர்கள் உள்ளிட்டவர்களுக்கு அரசு விதிகளின் படி வயது தளர்வு உண்டு. வயது வரம்பு என்பது 2023 ஜூலை 1ம் தேதியின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும்.
இந்த பணிகளுக்கு கெமிக்கல் என்ஜினீயரிங் மற்றும் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்தவர்கள் விண்ணப்பம் செய் வேண்டும். அதோடு விண்ணப்பத்தாரர்கள் GATE 2023 தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். GATE 2022ம் ஆண்டின் மதிப்பெண் இதற்கு பொருந்தாது என கூறப்பட்டுள்ளது.
தற்போதைய அறிவிப்பின்படி என்ஜினீயர் (கெமிக்கல்) பிரிவில் 5 பேர், என்ஜினீயர் (மெக்கானிக்கல்) பிரிவில் 4 பேர் என மொத்தம் 9 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் www.cpcl.co.in எனும் அதிகாரப்பூர்வ இணையதளம் சென்று ஆகஸ்ட் மாதம் 2ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும்.
விண்ணப்ப கட்டணமாக ரூ.500 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி, பிடபிள்யூபிடி, பெண்களுக்கு விண்ணப்ப கட்டணம் எதுவும் கிடையாது.
இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் GATE 2023 மதிப்பெண் மற்றும் நேர்க்காணல், சான்றிதழ் சரிபார்ப்பு முறையில் பணிக்கு தேர்வு செய்யப்படுவர்கள் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இது ஒரு தற்காலிக பணியாகும். பணிக்கு சேர்வோர் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் பணியமர்த்தப்பவார்கள். பணிக்கு வழங்கப்படும் சம்பளம் குறித்த விபரம் தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும் தகுதி அடிப்படையில் நல்ல சம்பளம் வழங்கப்படும் என கூறப்படுகிறது. ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் [email protected] எனும் இமெயிலை தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here
சிபிசிஎல்-ன் அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல Click Here












Click it and Unblock the Notifications