எழுத்து தேர்வு இல்லை.. மாதம் ரூ.45,000 முதல் ரூ.1.25 லட்சம் வரை சம்பளம்.. சென்னை டிஎன்இஜிஏ-யில் வேலை
சென்னை: தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் ஆணையர் அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்கள் மாதம் ரூ.45,000 முதல் ரூ.1.25 லட்சம் சம்பளத்தில் நிரப்பப்பட உள்ளது.
தமிழ்நாடு அரசின் அனைத்து மின் ஆளுமை திட்டத்தை மேம்படுத்தும் வகையில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் தனியாக ஏஜென்சி அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஏஜென்சி டிஎன்இஜிஏ என அழைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தான் சென்னையில் உள்ள தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் ஆணையர் அலுவலகத்தில் (Commissionerate of e-Governance Tamil Nadu e-Governance Agency or TNEGA) காலியாக உள்ள பணியிடங்கைள நிரப்புவதற்கான அறிவிப்பு என்பது வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:
என்ஜினீயர்: டிஎன்இஜிஏ-ல் என்ஜினீயர் பணிக்கு 4 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். பிஇ, பிடெக் பிரிவில் கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐடி, எம்சிஏ, எம்எஸ்சி, எம்இ, எம்டெக் படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் குறைந்தபட்சமாக ரூ.45 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும்.
டேட்டா அனலிஸ்ட்: Data Analyst பணிக்கு 2 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். பிஇ, பிடெக், எம்இ, எம்டெக் படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். மாதசம்பளமாக ரூ.45 ஆயிரம் வழங்கப்படும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரியாக்ட் யூஐ டெவலப்பர்: React UI Developer பணிக்கு ஒருவர் தேர்வு செய்யப்பட உள்ளார். பிஇ, பிடெக் பிரிவில் கம்ப்யூட்டர் சயின்ஸ் அல்லது ஐடி படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். மாதசம்பளமாக ரூ.1.25 லட்சம் வழங்கப்பட உள்ளது.
சீனியர் டேட்டா அனலிஸ்ட்: இந்த பணிக்கும் ஒருவர் தேர்வு செய்யபப்ட உள்ளார். பிஇ, பிடெக் பிரிவில் கம்ப்யூட்டர் சயின்ஸ் அல்லது ஐடி படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். மாதசம்பளமாக ரூ.1 லட்சம் வழங்கப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி: இந்த அனைத்து பணிகளுக்கும் விண்ணப்பம் செய்வோர் குறிப்பிட்ட துறையில் குறைந்தபட்சம் 3 ஆண்டு முதல் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டிருக்க வேண்டும். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் ஜனவரி மாதம் 30ம் தேதிக்குள் tnesevai.tn.gov.in இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்ய வேண்டும்.
நேர்க்காணல் முறையில்: இதற்கு விண்ணப்பம் கட்டணம் எதுவும் நிர்ணயம் செய்யப்படவில்லை. இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் மதிப்பெண், அனுபவத்தின் அடிப்படையில் ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டு நேர்க்காணல் முறையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். இது ஒரு தற்காலிக பணியாகும்.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காண Click Here
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications