ZOHO-வின் புதிய வேலைவாய்ப்பு.. மீண்டும் சென்னை நிறுவனத்துக்கு ஆட்சேர்ப்பு.. ரெடியா?
சென்னை: தமிழ்நாட்டில் முன்னணி ஐடி நிறுவனமாக உள்ள ஜோஹோவில் புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
Zoho... தமிழகத்தில் பல்வேறு இடங்களில் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் பணியாற்ற தற்போது பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் தான் ஜோஹோவில் தொடர்ந்து பல்வேறு பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது புதிய அறிவிப்பு என்பது வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் சென்னை, மதுரை, தென்காசி மாவட்டம் மத்தளம்பாறை உள்பட பல இடங்களில் ஜோஹோ செயல்பட்டு வரும் நிலையில் தற்போது சென்னை நிறுவனத்துக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். அதன் விபரம் வருமாறு:
தற்போதைய அறிவிப்பின் படி ஜோஹோவில் கஸ்டமர் சக்சஸ் (Customer Success) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோருக்கு ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வண்டும். மேலும் அனலிட்டிக்கல் மற்றும் ப்ராப்ளம் சால்விங் திறமை இருக்க வேண்டும். இதுதவிர கஸ்டமர் சக்சஸ் பிரிவில் 2 முதல் 5 ஆண்டு வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் தகுதி மற்றும் பணி அனுபவம் மற்றும் ஷார்ட்லிஸ்ட் செய்யப்படுவார்கள். இந்த ஷார்ட்லிஸ்ட் விண்ணப்பதாரர்களுக்கு அடுத்தக்கட்ட ரவுண்டுக்கான அழைப்பு என்பது விடுக்கப்படும். அதுபற்றிய விபரங்கள் இ-மெயில் அல்லது Call letter-ல் குறிப்பிடப்படும். அதனை விண்ணப்பதாரர்கள் ஃபாலே செய்ய வேண்டும்.
மேலும் பணிக்கான சம்பளம் குறித்த விபரம் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றிய விபரங்கள் பணிக்கு தேர்வாகும்பட்சத்தில் ஜோஹோ நிறுவனத்தின் எச்ஆர் மூலம் தெரிவிக்கப்படும். இந்த சம்பளம் என்பது பணி அனுபவம் மற்றும் தகுதியின் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்படும். அதோடு பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் பணியமர்த்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் ஜோஹோவின் அதிகாரப்பூர்வ இணையதளம் சென்று உடனடியாக விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி எதுவும் அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை. இதனால் முடிந்தவரை சீக்கிரமாக விண்ணப்பம் செய்வது நல்லது.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
"இந்தியாவில் இப்படி வாழ முடியுமா? கேள்வி எழுப்பிய பிரபலத்திற்கு இந்தியர்கள் தந்த தரமான பதிலடி -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி?












Click it and Unblock the Notifications