மிஸ் பண்ணாதீங்க.. மாதம் ரூ.30 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை சம்பளம்! சிஐபிஇடியில் சூப்பர் வேலை
சென்னை: மத்திய பெட்ரோல் கெமிக்கல் என்ஜினியரிங் அன்ட் டெக்னாலஜி நிறுவனத்தில் மாதம் ரூ.30 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் சம்பளத்தில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
மத்திய அரசின் கெமிக்கல் மற்றும் உரத்துறையின் கட்டுப்பாட்டில் தன்னாச்சியுடன் (Autonomous) ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள மத்திய பெட்ரோல் கெமிக்கல் என்ஜினியரிங் அன்ட் டெக்னாலஜி நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

விரிவுரையாளர்: இந்த நிறுவனத்தில் விரிவுரையாளர் பணிக்கு மெக்கானிக்கல் என்ஜினியரிங், பிளாஸ்டிக் டெக்னாலஜி உள்ளிட்ட பிரிவுக்கு தலா 2 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். அதேபோல் விரிவுரையாளர் பணிக்கு கம்ப்யூட்டர் சயின்ஸ்ட், கணிதம், வேதியியல், இயற்பியல், ஆங்கிலம், மேனேஜ்மென்ட் அன்ட் பைனான்சில் அக்கவுண்டிங் பணிக்கு தலா ஒருவர் தேர் செய்யப்பட உள்ளனர்.
கல்வி தகுதி: விரிவுரையாளர் பணியில் மெக்கானிக்கல் என்ஜினியரிங், பிளாஸ்டிக் டெக்னாலஜி, கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவுகளுக்கு குறிப்பிட்ட துறையில் இளங்கலை படிப்பு, என்ஜினியரிங், டெக்னாலஜி சார்ந்த படிப்பை முடித்திருக்க வேண்டும். மாறாக விரிவுரையாளர் பணிக்கு கணிதம், இயற்பியல், தேவியியல், மேனேஜ்மென்ட் என்ட் பைனான்சியல் அக்கவுண்ட்டிங் விண்ணப்பம் செய்ய விரும்புவோர் குறிப்பிட்ட துறையில் மாஸ்டர் டிகிரி படித்து இருக்க வேண்டும்.
உதவி பேராசியர்: மேலும் உதவி பேராசிரியர் பணிக்கு பிளாஸ்டிக் டெக்னாலஜி, மெக்கானிக்கல் என்ஜினியரிங், கணிதம், அசிஸ்டென்ட் பிளேஸ்மென்ட் கன்சல்டன்ட் பணிக்கு தலா ஒருவர் தேர்வு செய்யப்பட உள்ளனர். விரிவுரையாளர், உதவி பேராசிரியர் பணிகளுக்கு மொத்தம் 14 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
கல்வி தகுதி: உதவி பேராசிரியர் (பிளாஸ்டிக் டெக்னாலஜி, மெக்கானிக்கல் என்ஜினியரிங்) பணிக்கு பிஇ, பிடெக், எம்இ, எம்டெக் அல்லது பிஎச்டி படிப்பை முடித்து 2 ஆண்டு பணி அனுபம் கொண்டிருக்க வேண்டும். உதவி பேராசிரியர் (கணிதம்) பணிக்கு மாஸஅடர் டிகிரியை கணிதத்தில் முடித்து நெட் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இல்லாவிட்டால் கணிதத்தில் பிஎச்டி படிப்பை முடித்து 2 ஆண்டு பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
மாதசம்பளம்: விரிவுரையாளர் பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு குறைந்தபட்சமாக மாதம் ரூ.30 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது. அதேபோல் உதவி பேராசிரியர் பணிக்கு மாதம் ரூ.35 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது. அதோடு 65 வயதுக்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பது எப்படி: தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் www.cipet.gov.in இணையதளத்தில் விண்ணப்பம் டவுன்லோட் செய்து பூர்த்தி செய்து செப்டம்பர் மாதம் 22ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பங்களை Director & Head, CIPET-jaipur, SP-1298, Sitapura Industrial Area, Phase-III, Tonk Road, Jaipur - 302 022 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் விண்ணப்பத்தின் மேல்புறம் விண்ணப்பம் செய்யும் பணிக்கான பெயரை ‛போல்ட்' ஆக எழுத வேண்டும். மேலும் சந்தேகம் இருப்பின் [email protected] மூலம் தீர்த்து கொள்ளலாம்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
பணிக்கான கல்வி தகுதி விபரங்கள் அறிய Click Here
பணிக்கான விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய Click Here


Click it and Unblock the Notifications
