எஸ்பிஐ வங்கியில் வேலை.. 63 ஆயிரம் வரை சம்பளம்.. இன்றே கடைசி நாள்.. மிஸ் பண்ணிடாதீங்க!
சென்னை: எஸ்.பி.ஐ வங்கியில் சிபிஓ( Circle Based Officer) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் ஆகும். எனவே இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் இன்றே விண்ணப்பித்து விடுங்கள்
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் சிபிஓ (Circle Based Officer) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கிளர்க் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி விண்ணப்ப அவகாசம் 10 ஆம் தேதியுடன் முடிந்துள்ளது. கிளர்க் அறிவிப்பு வெளியான உடன் சிபிஓ பணியிடங்களை நிரப்பவும் எஸ்.பி.ஐ அறிவிப்பு வெளியிட்டது. இந்த பணியிடங்களுக்கு தேவையான கல்வி தகுதி, வயது வரம்பு உள்ளிட்டவை குறித்து பார்க்கலாம்.

கல்வி தகுதி: சிபிஒ பணிகளுக்கு மொத்தம் 5,309 பேர் தேர்வு செய்யப்படுவார்கள். கல்வி தகுதியை பொறுத்தவரை ஏதேனும் ஒரு பட்ட படிப்பு முடித்து இருந்தால் போதும். மெடிக்கல், என்ஜினியரிங், சார்டர்டு அக்கவுண்டண்ட் முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.
குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் அனுபவமும் அவசியம். ரிசர்வ் வங்கியின் 2-வது பட்டியலில் இடம் பெற்றுள்ள கமர்ஷியல் வங்கிகள் அல்லது பிராந்திய ஊரக வங்கிகளில் பணியாற்றிய அனுபவம் விண்ணப்பதாரர்களுக்கு இருப்பது அவசியம். அனுபவம் குறித்த விரிவான விவரங்களை விண்ணப்பதாரர்கள் தேர்வு அறிவிப்பில் பார்த்துக்கொள்ளலாம்.
வயது வரம்பு: வயது வரம்பை பொறுத்தவரை 21- வயதுக்கு மேற்பட்டவர்களும் 30-வயதுக்கு மிகாதவர்களும் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின் படி தளர்வுகளும் உண்டு. ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் எஸ்.சி / எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் தளர்வு உண்டு.
சம்பளம் எவ்வளவு?: தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு 36,000 - 63,840 வரை சம்பளமாக கிடைக்கும். பணியிடங்களை பொறுத்தவரை நாடு முழுவதும் உள்ள கிளைகளில் பணியமர்த்தப்படுவார்கள். தேர்வு முறையை பொறுத்தவரை ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு முறையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
தேர்வு நடைபெறும் இடங்கள்: தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, திருநெல்வேலி ஆகிய இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்படும். விண்ணப்பதாரர்களுக்கு உரிய நேரத்தில் தேர்வு மையம் குறித்து தெரிவிக்கப்படும். விண்ணப்ப கட்டணமாக ரூ.750 செலுத்த வேண்டும். எஸ்.சி/ எஸ்.டி பிரிவினருக்கு தேர்வு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க கடைசி நாள்: விண்ணப்பிக்க கடைசி நாள் 12.12.2023 ஆகும். ஆன்லைன் வழி தேர்வு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறும். தேர்வு அறிவிப்பை படிக்க https://sbi.co.in/documents/77530/36548767/212223-Final+Advertisement.pdf/3a3945e6-d8ee-fc51-8992-99d0ff942541?t=1700564748917 என்ற லிங்கை கிளிக் செய்யவும். தேர்வுக்கு விண்ணப்பிக்க https://sbi.co.in/web/careers/current-openings இங்கே கிளிக் செய்யவும்.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு!












Click it and Unblock the Notifications