10வது, டிகிரி படித்திருந்தால்.. சிஏம்டிஏவில் அருமையான வேலைகள்.. ரூ.50000 சம்பளம்.. நாளை கடைசி நாள்!
சென்னை: சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தில் (cmda) காலியாக உள்ள ஜூனியர் அசிஸ்டெண்ட், ஸ்டெனோ டைபிஸ்ட் கிரேடு-3, தட்டச்சர், ஃபீல்டுமேன், மெசன்ஜர் உள்ளிட்ட 131 பணியிடங்களுக்கு பணிகளுக்கான விண்ணப்பிக்க நாளை கடைசி நாளாகும். 15 ஆயிரம் ரூபாய் 50 ஆயிரம் வரைசம்பளம் கிடைக்கும். விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
அரசு வேலை என்பது இந்த காலத்தில் உள்ள பல இளைஞர்களின் விருப்பமாக உள்ளது. ஆனால் எல்லோருக்கும் அரசு வேலை கிடைப்பது இல்லை.
திறமையும், முயற்சியும் உள்ளவர்கள் சரியான காலகட்டத்தில் விண்ணப்பித்து படித்து முன்னேறி விடுகிறார்கள். சிலர் காலத்தை ஓட்டிவிட்டு கடைசியில் அரசு வேலையில் சேர முடியவில்லையே என்று ஏங்கி வருகிறார்கள். எனவே இந்த வாய்ப்பை தவறவிடாமல் முயற்சி செய்து பாருங்கள்.

பணி வாரியாக விவரங்கள்
சென்னை மாநகாட்சியில் மொத்தம் 131 பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றின் விவரத்தை இப்போது பார்ப்போம்
ஜூனியர் அசிஸ்டெண்ட் - 342.
ஸ்டெனோ டைபிஸ்ட் கிரேடு-3 - 243.
தட்டச்சர் - 104.
ஃபீல்டுமேன் - 195.
மெசன்ஜர் - 44

கல்வித்தகுதி
ஜூனியர் அசிஸ்டெண்ட் பணிக்கு விண்ணப்பிக்க ஏதேனும் ஒரு இளங்கலை பட்டப்படிப்பை பயின்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஸ்டெனோ டைபிஸ்ட் கிரேடு-3 பணிக்கு பத்தாம் வகுப்பில் தேர்ச்சி அத்துடன் தட்டச்சு (ஆங்கிலம், தமிழ்) முடித்திருக்க வேண்டும்
தட்டச்சர் பணிக்கு பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளதடன் அத்துடன் தட்டச்சு (ஆங்கிலம், தமிழ்) முடித்திருக்க வேண்டும்
ஃபீல்டுமேன் பணிக்கு பத்தாம் வகுப்பில் படித்திருந்தால் விண்ணப்பிக்கலாம். சைக்கிள் ஓட்டத்தெரிந்தவராக இருக்க வேண்டும்.
மெசன்ஜர் பணிக்கு எட்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

ஆன்லைனில் விண்ணப்பிக்க
ஆன்லைனில், https://www.cmdarecruitment.in/ அல்லது http://www.cmdachennai.gov.in/ - என்ற இணையதள முகவரியில் சென்று விண்ணப்பிக்கலாம். ஆனால் ஆன்லைனில் விண்ணப்பிக்க திங்கள்கிழமை நாளை கடைசி நாளாகும் ( 24.02.2020). எனவே இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் உடனே விண்ணபிப்பது பலன் அளிக்கும்.

50 ஆயிரம் சம்பளம்
அரசு வேலை என்றாலும் சம்பளம் எவ்வளவு என்பது எல்லோருக்கும் முக்கியமானதாக இருக்கும். அந்த வகையில் ஜூனியர் அசிஸ்டெண்ட், ஸ்டெனோ டைபிஸ்ட் கிரேடு-3, தட்டச்சர், ஃபீல்டுமேன், மெசன்ஜர் உள்பட ஒவ்வொரு பணிகளை பொறுத்து ஊதியம் மாறுபடும். பணிகளை பொறுத்து ரூ.15,700 முதல் அதிகபட்சமாக ரூ.50,000 வரை மாத சம்பளமாக கிடைக்கும்.

முழு விவரம்
சென்னை மாநகாட்சி பணிகள் குறித்து இதை தவிர கூடுதல் விவரம் உங்களுக்கு தெரிந்து கொண்டும் என்று விரும்புகிறீர்களா.. அப்படி என்றால் நீங்கள் https://www.cmdarecruitment.in/cmda-directrecruitment2020.pdf - என்ற இணையதள முகவரியை பார்த்து தெரிந்து கொள்ளலாம். மறந்துவிடாதீர்கள் நாளைக்குள் சிஎம்டிஏ வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications