மாதசம்பளம் ரூ.62,000 முதல் ரூ.2.25 லட்சம்.. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. ரெடியா?
சென்னை: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் தேர்வு இன்றி நேர்க்காணல் முறையில் பணியமர்த்தப்பட உள்ளனர். இதில் தேர்வாகும் நபர்களுக்கு தொடக்கத்திலேயே குறைந்தபட்சம் ரூ.62 ஆயிரம் முதல் ரூ.2.25 லட்சம் வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
சென்னையில் மெட்ரோ ரயில் இயங்கி வருகிறது. இந்நிலையில் தான் சென்னை மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் சார்பில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:

காலியிடங்கள்: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் பொது மேலாளர் (General Manager)பணிக்கு 2 பேர், கூடுதல் பொது மேலாளர் (Additional General Manager) பணிக்கு ஒருவர், இணை பொது மேலாளர் (Joint General Manager) பணிக்கு ஒருவர், துணை பொது மேலாளர் (Deputy General Manager) பணிக்கு 3 பேர், மேலாளர் (Manager) பணிக்கு 5 பேர், துணை மேலாளர்/உதவி மேலாளர்(Deputy Manager/Assistant Manager) பணிக்கு 3 பேர், லைன் சூப்பர்வைசர்/க்ரூ கன்ட்ரோலர் (Line Supervisor/Crew Controller) பணிக்கு ஒருவர் என மொத்தம் 16 பேர் பணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர்.
வயது வரம்பு: பொது மேலாளர் பணிக்கு 45 வயது முதல் 55 வயதுக்குள்ளும், கூடுதல் பொது மேலாளர் பணிக்கு 47 வயதுக்குள்ளும், இணை பொது மேலாளர் பணிக்கு 43 வயதுக்குள்ளும், துணை பொது மேலாளர் பணிக்க 40 வயதுக்குள்ளும், மேலாளர் பணிக்கு 38 வயதுக்குள்ளும், துணை மேலாளர்/உதவி மேலாளர் பணிக்கு 30 முதல் 35 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். மேலும் லைன் சூப்பர்வைசர்/க்ரூ கண்ட்ரோலர் பணிக்கு ஓய்வு பெற்றவராக இருக்க வேண்டும். வயது வரம்பு என்பது 07.02.2024 என்ற தேதியின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும்.
மாத சம்பளம்: பொது மேலாளர் பணிக்கு மாதசம்பளமாக ரூ.2.25 லட்சம் வழங்கப்படும். கூடுதல் பொது மேலாளர் பணிக்கு ரூ.1.60 லட்சம், இணை பொது மேலாளர் பணிக்கு ரூ.1.45 லட்சம், துணை பொது மேலாளர் பணிக்கு ரூ.1.25 லட்சம், மேலாளர் பணிக்கு ரூ.85 ஆயிரம், துணை மேலாளர்/உதவி மேலாளர் பணிக்கு ரூ.62 ஆயிரம் முதல் ரூ.75 ஆயிரம், லைன் சூப்பர்வைசர்/க்ரூ கண்ட்ரோலர் பணிக்கு அரசு விதிகளின் படியும் சம்பளம் வழங்கப்படும்.
கல்வி தகுதி: பொது மேலாளர், கூடுதல் பொது மேலாளர், இணை பொதுமேலாளர், துணை பொது மேலாளர், மேலாளர், துணை மேலாளர்/ உதவி மேலாளர் பணிகளுக்கு பணிக்கு பிஇ, பிடெக் பிரிவில் இசிஇ, சிஎஸ்இ, ட்ரிபில்இ, சிஎஸ்இ படிப்புகளில் ஒன்றை முடித்திருக்க வேண்டும். லைன் சூப்பர்வைசர்/க்ரூ கண்ட்ரோலர் பணிக்கு ஏதேனும் ஒரு பிரிவில் என்ஜினீயரிங் முடித்திருக்க வேண்டும். இந்த பணி என்பது Deputation அடிப்படையிலானது. இதனால் பணிக்கு விண்ணப்பம் செய்வோர் ரயில்வே அல்லது மத்திய அரசு நிறுவனத்தில் குறைந்தபட்சம் 2 ஆண்டு முதல் அதிகபட்சமாக 20 ஆண்டுகள் பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பது எப்படி: தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் https://careers.chennaimetrorail.org/ இணையதளம் மூலம் மார்ச் மாதம் 24ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்ப கட்டணமாக ரூ.300 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி பிரிவினர் என்றால் விண்ணப்ப கட்டணமாக ரூ.50 வழங்க வேண்டும்.
பணி காலம் எவ்வளவு: இது ஒரு ஒப்பந்த அடிப்படையிலான பணியாகும். டெபுடேஷன் அடிப்படையில் விண்ணப்பித்து தேர்வு செய்யப்படும் நபர்கள் முதலில் 3 ஆண்டு வரை பணியமர்த்தப்படுவார்கள். அதிகபட்சமாக 5 ஆண்டு வரை பணி நீட்டிப்பு என்பது வழங்கப்படும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணி தொடர்பான கூடுதல் விபரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காண Click Here
பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here
-
அதிகாலை 6 மணிக்கு மெயில்! 12,000 இந்திய ஊழியர்கள் பணி நீக்கம்! ஷாக் கொடுத்த ஐடி நிறுவனம் -
ஒரே நாளில்.. அப்படியே ஸ்டன் ஆன ஊழியர்கள்.. எத்தனை வருட ஏக்கம்.. கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
பட்டு பட்டுன்னு ஊழியர்களை குறைத்த டிசிஎஸ், இன்போசிஸ், HCL.. 75000 ஐடி ஊழியர்கள் எங்கே? -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்!












Click it and Unblock the Notifications