செம வாய்ப்பு.. மாதம் ரூ.50,000 டூ ரூ.1.60 லட்சம் வரை சம்பளம்.. சிஐஎல் நிறுவனத்தில் சூப்பர் வேலை
சென்னை: மாதம் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1.60 லட்சம் வரையிலான சம்பளத்தில் இந்திய நிலக்கரி நிறுவனத்தில் காலியாக உள்ள ஏராளமான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
மத்திய அரசின் நிலக்கரி துறையின் கட்டுப்பாட்டில் இந்திய நிலக்கரி லிமிடெட்டில் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

காலியிடங்கள்: இந்த நிறுவனத்தில் மேனேஜ்மென்ட் ட்ரெய்னி பிரிவின் கீழ் 3 பிரிவுகளுக்கு தேவையான ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். அதன்படி மைனிங் (Mining) பணிக்கு 351 பேர், சிவில் பணிக்கு 172 பேர், ஜியாலஜி பணிக்கு 37 பேர் என மொத்தம் 560 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
வயது வரம்பு: விண்ணப்பம் செய்ய விரும்புவோர் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். ஓபிசி பிரிவினருக்கு 3 வயதும், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 வயதும், மாற்றுத்திறனாளிகள் என்றால் 10 வயது வரையும் வயது தளர்வு வழங்கப்படும். விண்ணப்பத்தாரர்களின் வயது என்பது 2023 ஆகஸ்ட் மாதம் 31ம் தேதியின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும்.
கல்வி தகுதி: மைனிங் பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்புவோர் மைனிங் என்ஜினியரிங் படிப்பை முடித்திருக்க வேண்டும். சிவில் பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்புவோர் சிவில் என்ஜினியரிங் படிப்பை முடித்திருக்க வேண்டும். ஜியாலஜி பணிக்கு எம்எஸ்சி/எம்டெக் பிரிவில் ஜியாலஜி, அப்ளைட் ஜியாலஜி, ஜியோ பிசிக்ஸ் அல்லது அப்ளைட் ஜியோபிசிக்ஸ் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
மாதசம்பளம்: இந்த பணிகளுக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு குறைந்தபட்சமாக ரூ.50 ஆயிரம் வழங்கப்படும். அதிகபட்சமாக ரூ.1.60 லட்சம் வரை சம்பளமாக வழங்கப்படும். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் அக்டோபர் மாதம் 12 ம் தேதி மாலை 6 மணிக்குள் www.coalindia.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய வேண்டும்.
விண்ணப்பிப்பது எப்படி: விண்ணப்ப கட்டணமாக ரூ.1,180 நிர்ணயம் செய்யப்பட உள்ளனர். எஸ்சி, எஸ்டி, பிடபிள்யூபிடி, இந்திய நிலக்கரி லிமிடெட் ஊழியர்களுக்கு விண்ணப்ப கட்டணம் என்பது இல்லை. இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் GATE-2023 தேர்வு மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here
-
39 வயதில் எழுதிய தேர்வு.. 60 வயதில் வந்த அரசு வேலை.. மஜித்தின் கதை சொல்லும் கசப்பான பாடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications