மத்திய அரசின் நிலக்கரி நிறுவனத்தில் வேலை! 660 காலியிடங்கள்! என்ஜினியரிங் முடிச்சவங்களுக்கு ஜாக்பாட்!
சென்னை: மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் கோல் இந்தியா நிறுவனத்தில் 662 காலியிடங்களை நிரப்புவதற்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. என்ஜினியரிங் படித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஆரம்ப சம்பளமே ரூ.60 ஆயிரம் கிடைக்கும். மாதம் 1,80,000 வரை சம்பளம் வழங்கப்படும்.
மத்திய அரசுக்கு சொந்தமான பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்று கோல் இந்தியா லிமிடெட். நிலக்கரி நிறுவனமான இதன் தலைமையகம் கொல்கத்தாவில் உள்ளது. மத்திய நிலக்கரி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்த பொதுத்துறை நிறுவனம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ளது.

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனம் என்பதால் இதில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கை நிறைய சம்பளம், சலுகைகள் உள்ளிட்டவைகள் கிடைக்கின்றன. கோல் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள 662 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யாரெல்ல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வித் தகுதி உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
பணியிடங்கள் விவரம்:
மேலாண்மை பயிற்சியாளர்
சிவில் - 178
மின்சாரம் - 221
இயந்திரவியல் - 145
சிஸ்டம் - 43
மின்னணுவியல் மற்றும் தொலைத்தொடர்பு - 38
புவியியல் - 15
தொழில்துறை பொறியியல் - 11
தொழில்துறை பொறியியல் - 5
தொழில்துறை பொறியியல் - 4
கல்வித் தகுதி:
துறைசார்ந்த பிரிவில் என்ஜினியரிங் பட்டம் முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள். குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். வயது வரம்பை பொறுத்தவரை 30 வயதுக்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும்.
அரசு விதிகளின் படி வயது உச்ச வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும். எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் தளர்வுகள் அளிக்கப்படும்.
சம்பளம் எவ்வளவு?
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.60,000 முதல் 1,80,000 வரை சம்பளமாக கிடைக்கும். ஆரம்ப சம்பளமே ரூ.60 ஆயிரம் கிடைக்கும். பயிற்சி காலத்திலேயே இந்த சம்பளம் வழங்கப்படும். தேர்வு முறையை பொறுத்தவரை சிபிடி எனப்படும் கணினி வழியிலான தேர்வு நடைபெறும். நேர்முகத்தேர்வும் நடைபெறும்.
விண்ணப்பிப்பது எப்படி?
தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தேர்வு அறிவிப்பினை படித்து உறுதி செய்து கொண்ட பிறகு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப கட்டணமாக ரூ.1,800 செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பிரிவினருக்கு தேர்வுக் கட்டணம் கிடையாது. ஆன்லைன் வழியாக கட்டணம் செலுத்த வேண்டும். விண்ணப்பிக்க 11.06.2025 கடைசி நாளாகும். https://www.coalindia.in/ என்ற இணையதளம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
அதிகாரப்பூர்வ தேர்வு அறிவிப்பினை படிக்க: https://d3u7ubx0okog7j.cloudfront.net/documents/Advertisement_03_2026_dated_05.05.2026.pdf












Click it and Unblock the Notifications