கொச்சின் ஷிப்யார்டு நிறுவனத்தில் வேலை.. ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்களுக்கு சான்ஸ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான கொச்சின் ஷிப்யார்டு லிமிடெட் நிறுவனத்தில் அப்ரெண்டீஸ் பயிற்சி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஐடிஐ, டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். இந்த பணியிடங்களுக்கு எப்படி விண்ணப்பிப்பது என்பது உள்ளிட்ட விவரங்களை இங்கு காணலாம்.

கொச்சின் கப்பல் கட்டும் நிறுவனம் கேரள மாநிலம் கொச்சியில் உள்ளது. மத்திய கப்பல் மற்றும் நீர் வழி போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் இந்த நிறுவனம் செயல்படுகிறது. பொதுத்துறை நிறுவனமான கொச்சின் ஷிப்யார்டு நிறுவனம் டேங்கர் கப்பல்கள், சரக்கு கப்பல்கள் உள்ளிட்டவை கட்டப்படுகின்றன.

Cochin Shipyard Apprentice job Recruitment 2026 Eligibility Qualification and Application Details

இந்த நிறுவனத்தில் பயிற்சி பணியிடங்கள் எனப்படும் அப்ரெண்டீஸ் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வித்தகுதி என்ன? என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.

பணியிடங்கள்:

* சாரம் அமைக்கும் பணி (Scaffolder) - 60 காலியிடங்கள்
* பாதுகாப்பு உதவியாளர் - 13 பணியிடங்கள்

கல்வித் தகுதி:

* ஸ்கேப்ஃபோல்டர் பணிக்கு குறைந்தபட்ச 10 ஆம் வகுப்பும் அதிகபட்சம் 12 ஆம் வகுப்பும் முடித்து இருக்க வேண்டும்.
* பாதுகாப்பு உதவியாளர் பணிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஃபயர் சேஃப்டி பிரிவில் ஓராண்டு கொண்ட டிப்ளமோ பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தொழிற்சாலை, பொதுத்துறை நிறுவனம், பொறியியல் நிறுவனம் அல்லது கட்டுமான நிறுவனம் ஆகியவற்றில் பாதுகாப்புத் துறையில் குறைந்தது ஓராண்டு தொழில்முறை அனுபவம் அல்லது பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

45 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். அதாவது 1981க்கு முன்பாக பிறந்தவராக இருத்தல் கூடாது. அரசு விதிகளின் படி வயது உச்ச வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும். எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வழங்கப்படும்.

Scaffolder Trainee - பணிக்கு அதிகபட்ச வயது வரம்பு 23 ஆகும்.

சம்பளம் எவ்வளவு?

Scaffolder Trainee - பணிக்கு
பயிற்சியின் போது உதவித்தொகை: ரூ.10,000/-
பயிற்சிக்குப் பின் மாதாந்திர ஊதியம்: ரூ.20,100/-

பாதுகாப்பு உதவியாளர் - ரூ.23,300/- சமபளம் வழங்கப்படும்

தேர்வு முறை:

தகுதியான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு செய்முறை தேர்வு, உடல் தகுதி தேர்வு அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிப்பது எப்படி?

தகுதியும் ஆர்வமும் இருப்பவர்கள் அதிகாரப்பூர்வ தேர்வு அறிவிப்பினை படித்து உறுதி செய்து கொண்ட பிறகு விண்ணப்பிக்கலாம். 30.06.2026 முதல் 22.07.2026 க்குள் விண்ணப்பிக்கலாம். https://cochinshipyard.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு அறிவிப்பினை படிக்க https://cochinshipyard.in/uploads/career/787ebbc693cb449ab2f3108a03dfd102.pdf

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+