‛‛மாற்றுத்திறனாளிகளுக்கு ஜாக்பாட்’.. ரூ.4 லட்சம் சம்பளத்தில் சென்னை Cognizant தரும் சூப்பர் வேலை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரபல ஐடி நிறுவனமான Cognizant சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் பணியமர்த்தப்படுவதோடு, மாதம் ரூ.33,500 என்று ஆண்டுக்கு ரூ.4 லட்சம் சம்பளம் வழங்கப்பட உள்ளது.

தற்போதைய அறிவிப்பின்படி காக்னிசண்ட் நிறுவனத்தில் சென்னையில் தற்போது மாற்றுத்திறனாளிகளை பணியமர்த்துவதற்கான சிறப்பு அறிவிப்பு Cognizant 2024 GenC PWD hiring என்பது வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் டெக்னிக்கல் சப்போர்ட் மற்றும் சாப்ட்வேர் டெவலப்மென்ட் உள்ளிட்டவற்றுக்கான பணிக்கு தேர்வு செய்யப்படுகின்றனர்.

it jobs job jobs

இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் பிஇ, பிடெக், எம்இ, எம்டெக், எம்எஸ்சி பிரிவில் கம்ப்யூட்டர் சயின்ஸ் அல்லது இன்பர்மேஷன் டெக்னாலஜி அல்லது எம்எஸ் சாப்ட்வேர் இன்ஜினியரிங்) படிப்பை 2023, 2024ம் ஆண்டில் முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். இவர்கள் 10, 12 அல்லது டிப்ளமோ படிப்பை முடித்திருக்கும் பட்சத்திலும் சரி, அதன்பிறகு மேற்படிப்பு படித்தபோதும் 50 சதவீத மதிப்பெண்களுடன் பாஸாகி இருக்க வேண்டும். 49.9 சதவீத மதிப்பெண்ணில் பாஸாகி இருந்தாலும் தேர்வு செய்யப்படமாட்டார்கள். மேலும் அரியர்ஸ் இருக்க கூடாது.

மேலும் எச்டிஎம்எல் ப்ரோகிராம் பற்றிய அடிப்படை புரிதல் இருக்க வேண்டும். ஜாவா ப்ரோகிராம் தெரிந்திருக்க வேண்டும். இதுதவிர OOPS கான்செப்ட்கள் பற்றிய புரிதல், புதிய தொழில்நுட்பங்களை கற்கும் திறன், ஷிப்ட் அடிப்படையில் பணி புரிய தயாராக இருக்க வேண்டும். மேலும் கண்டிப்பாக பர்சனல் மெயில் ஐடி இருக்க வேண்டும். அதனை தான் விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும். ஏனென்றால் பிற அனைத்து விஷயங்களும் இந்த மெயில் ஐடி மூலம் தான் Superset மூலம் அனுப்பி வைக்கப்படும். இந்த மெயில் ஐடியை எந்த காரணம் கொண்டும் அலுவலகத்தில் மாற்றம் செய்ய முடியாது. இதனால் கவனமாக இருக்க வேண்டும்.

பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு ரூ.4,01,988 வரை ஆண்டு சம்பளம் வழங்கப்படும். அதன்படி பார்த்தால் மாதத்துக்கு ரூ.33,499 வரை சம்பளம் என்பது கிடைக்கும். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி என்பது ஜுலை 16ம் தேதியாகும். அன்றைய தினம் மாலை 6 மணிக்குள் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் Cognizant இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்யலாம். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் உள்ள நிறுவனத்தில் நியமனம் செய்யப்படுவார்கள்.

மேலும் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோருக்கு சில முக்கிய அட்வைஸ்கள் வழங்கப்பட்டுள்ளது. அதாவது விண்ணப்பம் செய்யும்போது மாற்றுத்திறனாளி என்பதற்கான சான்றிதழ்கள் ஆதாரத்தை இணைக்க வேண்டும். Resume குறைந்தபட்சம் 2 பக்கத்தில் ஹை ரீசொல்யூசனுடன் இருக்க வேண்டும்.

அதில் பாஸ்போர்ட் போட்டோ இடம்பெற்றிருக்க வேண்டும். பாஸ்போர்ட் சைஸ் போட்டோவின் பின்புறம் லைட் கலராக இருக்க வேண்டும். பள்ளி, கல்லூரி, இளநிலை, முதுநிலை கல்விக்கான சான்றிதழ், ப்ரோபஷனல் சான்று உள்ளிட்டவை இருக்க வேண்டும். பான் கார்டு இருக்க வேண்டும். இல்லாவிட்டால் உடனே அப்ளை செய்ய வேண்டும். பான் கார்ட்டில் பெயர் கண்டிப்பாக சரியான முறையில் இடம்பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+