"ஏதாவது ஒரு டிகிரி போதும்".. Cognizant-ல் வேலைவாய்ப்பு.. சென்னை, பெங்களூரில் பணி.. அசத்தல் சம்பளம்
சென்னை: காக்னிசண்ட் ஐடி நிறுவனத்தில் சென்னை, பெங்களூர், கொல்கத்தா ஆகிய இடங்களில் பணியாற்ற தேவையான ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஏதாவது ஒரு பிரிவில் 3 ஆண்டு டிகிரி முடித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்யலாம். பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு கைநிறைய சம்பளம் வழங்கப்பட உள்ளது.
முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான காக்னிசண்ட்டில்(Congnizant) இருந்து பல்வேறு வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்புகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. அந்த வகையில் புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:

காக்னிசண்ட் நிறுவனத்தில் கிராசூவேட் டிரெய்னி (Graduate Trainee) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இது சப்போர்ட் கஸ்டமர் மற்றும் டெக்னிக்கல் சப்போர்ட் ரோல் ஆகும். ஐடி சர்வீஸ் டெஸ்க் பணி தான் இருக்கும். இந்த பணிக்கு 3 ஆண்டு டிகிரி படித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். குறிப்பாக 2022 மற்றும் 2023ம் ஆண்டில் படிப்பை முடித்தவர்கள் தகுதியானவர்கள். இவர்கள் 10, 12ம், டிப்ளமோ அல்லது இளநிலை பட்டப்படிப்பில் 50 சதவீதத்துக்கு அதிகமாக கட்டாயம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
இதுதவிர ஆங்கிலத்தில் பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். டெக்னாலஜி தொடர்பான விபரங்களை விரைவாக கற்று கொண்டு Client-களிடம் எடுத்து சொல்வதற்கான திறமை இருக்க வேண்டும். பணி நியமனம் என்பது சென்னை, பெங்களூர், கொல்கத்தா ஆகிய 3 இடங்களில் செய்யப்படும். இதனால் விண்ணப்பம் செய்வோர் எந்த இடத்துக்கும் செல்ல தயாராக இருக்க வேண்டும். அதுமட்டுமின்றி ஷிப்ட் அடிப்படையிலான பணியையும் பார்க்க ரெடியாக இருக்க வேண்டும்.
மேலும் PAN Card-ல் உங்களின் பெயர் முகவரி சரியாக இருக்க வேண்டும். சான்று மற்றும் பார்ன் கார்டு இடையே வித்தியாசம் இருந்தால் உடனடியாக சரி செய்து கொள்ள வேண்டும். ஏனென்றால் இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களின் பின்னணி விபரங்கள் முழுவதும் அறிந்தே பிறகே நியமனம் செய்யப்படுவார்கள்.
மேலும் பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு ஆண்டுக்கு ரூ.2.52 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும். அதன்படி பார்த்தால் மாதத்துக்கு தொடக்கத்திலேயே ரூ.21 ஆயிரம் வரை சம்பளம் என்பது கிடைக்கும். இதுதவிர பிற சலுகைகளும் உள்ளது. அதன்படி நைட் ஷிப்ட் அலோவன்ஸ், அலுவலகம் சென்று வர Cabs மூலம் பிக் அண்ட் டிராப் செய்வது, பெர்பாமன்ஸை பொறுத்து மேலும் சில சலுகைகள் என்பது வழங்கப்படும்.
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் ஜுலை 20ம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு Cognizant இணையதளம் சென்று விண்ணப்பம் செய்யலாம். பணிக்கு தேர்வாகும் நபர்கள் பெங்களூர், சென்னை, கொல்கத்தாவில் உள்ள அலுவலகங்களில் நியமனம் செய்யப்டுவார்கள். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை, பெங்களூர், கொல்கத்தாவில் பணியமர்த்தப்பட உள்ளனர்.
பணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications