ரூ.6.75 லட்சம் சம்பளம்.. சென்னை - கோவையில் உள்பட 9 இடங்களில் Cognizant பணி.. ஜூன் 30 கடைசி நாள்
சென்னை: சென்னை, கோவை உள்பட 9 இடங்களில் செயல்பட்டு வரும் காக்னிசண்ட் ஐடி நிறுவனத்தில் காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய ஜூன் 30ம் தேதி கடைசி நாளாகும்.

முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக காக்னிசண்ட்டில் (Cognizant) இருந்து தற்போது இன்ஜினியரிங் கிராசூவேட்களுக்கான GenC Next, GenC and Gen C பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோருக்கு முன்அனுபவம் என்பது தேவையில்லை. அதாவது 2025ம் ஆண்டில் பிஇ, பிடெக், எம்இ, எம்டெக் படிப்பை முடித்திருக்க வேண்டும். லெதர் டெக்னாலஜி, ஃபுட் டெக்னாலஜி, பேஷன் டெக்னாலஜி படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்ய முடியாது.
மற்றவர்கள் என்றால் 60 சதவீத மதிப்பெண்ணுடன் 10, பிளஸ் 2, டிப்ளமோ, யுஜி, பிஜி படிப்பை முடித்திருக்க வேண்டும். 59.9 சதவீத மதிப்பெண்ணுடன் படிப்பை முடித்தவர்களும், அரியர்ஸ் இருப்பவர்களுக்கும் அனுமதியில்லை.
பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு ஆண்டுக்கு குறைந்தபட்சமாக ரூ.4 லட்சம் வழங்கப்படும். அதிகபட்சம் என்றால் ரூ.6.75 லட்சம் வரை சம்பளம் என்பது வழங்கப்படும். பணி அனுபவம் மற்றும் திறமையை பொறுத்து சம்பளம் மாறுபடும். இந்த பணிக்கு Cognizant இணையதளம் வழியாக விண்ணப்பம் செய்யலாம். ஜூன்30ம் தேதி நள்ளிரவு11.59 மணிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும்.
இந்த பணிக்கான விபரங்கள் அனைத்தும் Superset-ல் பதிவு செய்யப்படும் இ-மெயில் ஐடி மூலம் தான் தெரிவிக்கப்படும். இதனால் சொந்த மெயில் ஐடியை வழங்க வேண்டும். ஒருமுறை இ-மெயில் முகவரி கொடுத்த பிறகு அதனை மீண்டும் மாற்றம் செய்ய முடியாது. இதனால் கவனமாக சரியான இ-மெயில் முகவரியை கொடுக்க வேண்டும்.
இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் மொத்தம் 9 இடங்களில் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். இதில் தமிழகத்தை எடுத்து கொண்டால் சென்னை, கோவையில் உள்ள காக்னிசண்ட் நிறுவனத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர். இதுதவிர பெங்களூர், ஹைதராபாத், புனே, கொல்கத்தா, புவனேஸ்வர், இந்தூரில் செயல்பட்டு வரும் காக்னிசண்ட் நிறுவனங்களிலும் பணியமர்த்தப்பட உள்ளனர்.
இந்த பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
IT Jobs: அனுபவம் வேண்டாம்.. சென்னை எச்சிஎல் நிறுவனத்தில் குவிந்திருக்கும் வேலை.. நாளை இண்டர்வியூ -
"பணத்தை கொடுத்துட்டு.. அழுது புலம்புங்க.. நான் கேட்கிறேன்.." வினோத பிஸ்னஸை ஆரம்பித்த இளைஞர் -
IT Jobs: 3 பிரிவில் காலியிடங்கள்.. சென்னை உள்பட 2 இடங்களில் மார்ச் 21ல் இண்டர்வியூ.. ரெடியா? -
IT JOBS: சென்னை டிசிஎஸ் அலுவலகத்தில் மார்ச் 21ல் இண்டர்வியூ.. இந்த வேலைவாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க -
MBBS Job: மத்திய அரசில் மருத்துவ அதிகாரி வேலை.. யுபிஎஸ்சி அறிவிப்பு! 1,358 பணியிடங்கள்.. விண்ணப்பிக்க ரெடியா -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு!












Click it and Unblock the Notifications