"Hybrid" முறையில் வேலை.. Cognizant ஐடி நிறுவனத்தில் அசத்தலான பணி.. விண்ணப்பம் செய்வது ரொம்ப ஈஸி

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரபல ஐடி நிறுவனமான காக்னிசண்ட்டில் (Congnizant) நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் சென்னையில் பணியமர்த்தப்படுவதோடு, Hybrid முறையில் பணிக்கு செல்லலாம்.

Congnizant... இந்தியாவில் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக இது உள்ளது. இந்த நிறுவனத்தின் முழு பெயர் என்பது காக்னிசண்ட் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ் கார்ப்பரேஷன்(Cognizant Technology Solutions Corporation) என்பதாகும்.

it jobs job jobs

இந்த நிறுவனத்தின் நிதி, சுகாதாரம், சில்லறை வர்த்தகம் உள்பட பல்வேறு துறைகளில் தேவையான டெக்னாலஜி சார்ந்த சேவைகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் தான் சென்னையில் இயங்கும் காக்னிசண்ட் நிறுவனத்தில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு என்பது வெளியாகி உள்ளது. அதன் முக்கிய விபரங்கள் வருமாறு:

தற்போதைய அறிவிப்பின்படி காக்னிசண்ட் நிறுவனத்தில் அசோசியேட் - ப்ரோஜெக்ட்ஸ் (Associate - Projects) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு பிஇ, பிடெக் படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும், SAP DART, SAP ILM, Amazon S3, Azure Storage, SAP Arching, User Access and Identity mgmt ஆகியவை பற்றி தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

பணிக்கு தேர்வாகும் நபர்கள் டிசைன், இம்பிளிமென்டேஷன் (Implementation), டெஸ்ட்டிங், டெவலப் எஸ்ஓபிஎஸ் (SOPs), சிஸ்டம் அட்மினிஸ்ட்ரேஷன், ப்ராஜெக்ட் பிளானிங் மற்றும் செட்அப், ஹார்டுவேர் மற்றும் சாப்ட்வேரர் தொடர்பானவற்றை அடையாளம் கண்டு வாடிக்கையாளர்களுக்கு உதவி செய்வது உள்ளிட்ட பல பணிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.

இந்த பணிக்கான சம்பளம் குறித்த விபரம் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்படவில்லை. தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் சம்பளம் நிர்ணயம் செய்யப்பட உள்ளது. இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் பணியமர்த்தப்பட உள்ளனர். பணியாளர்களுக்கான வேலை என்பது Hybrid முறையாகும்.

இதன்மூலம் வீடுகளில் இருந்தும் கூட பணியாற்ற முடியும். அதோடு வாரத்தில் சனி, ஞாயிறு என 2 நாட்கள் விடுமுறை தினமாகும். இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் Cognizant இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி குறிப்பிடப்படவில்லை. இதனால் இந்த பணியை விரும்புவோர் முன்கூட்டியே விண்ணப்பம் செய்வது நல்லது.

பணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+