Cognizant வேலைவாய்ப்பு.. பிஎஸ்சி, பிகாம், இன்ஜினியரிங் படித்தோருக்கு சூப்பர் சான்ஸ்! சென்னையில் பணி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் காக்னிசண்ட் (Congnizant) ஐடி நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் Hybrid முறையில் வேலை செய்யலாம். அதன்படி வாரத்தில் 3 நாட்கள் அலுவலகத்திலும், 2 நாட்கள் வீட்டில் இருந்தும் பணி செய்யலாம்.

தமிழ்நாட்டில் பல்வேறு முன்னணி ஐடி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அதில் ஒன்று தான் காக்னிசண்ட். Cognizant Technology Solutions Corporation என்பதன் சுருக்கம் தான் காக்னிசண்ட்.

it jobs job jobs

இந்த நிறுவனம் சென்னையில் செயல்பட்டு வரும் நிலையில் புதிய வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் சில முக்கிய தகவல்கள் வருமாறு:

தற்போதைய அறிவிப்பின்படி காக்னிசண்ட் நிறுவனத்தில் அசோசியேட் - புராஜெக்ட்ஸ் (Associate - Projects)பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு பிஎஸ்சி, பிகாம், இன்ஜினியரிங் முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். மேலும் விண்ணப்பம் செய்வோருக்கு 3 முக்கிய திறமைகள் இருக்க வேண்டும் Unified Communication - Avaya, Cisco IP Telephony, Basic IP Telephony ஸ்கில்ஸ் இருக்க வேண்டும்.

மேலும் மைக்ரோசாப்ட் டீம்ஸ், ஆடியோ/வீடியோ கான்பரன்ஸ், சிஸ்கோ யூனிபைட் கம்யூனிகோசியோ எம்ஜிஆர் (Cisco Unified Communicatio Mgr) தெரிந்திருக்க வேண்டும். நல்ல கம்யூனிகேசன் திறமை இருக்க வேண்டும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கான சம்பளம் குறித்த விபரம் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்படவில்லை.

தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் சம்பளம் நிர்ணயம் செய்யப்பட உள்ளது. இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் பணியமர்த்தப்பட உள்ளனர். காக்னிசண்ட் நிறுவனத்தை பொறுத்தவரை Hybrid முறையிலான பணி நடைமுறையில் உள்ளது. இதனால் வாரத்தில் 5 நாட்களும் அலுவலகம் சென்று பணியாற்ற வேண்டியது இருக்காது. வாரம் அதிகபட்சமாக 2 நாட்கள் வரை வீட்டில் இருந்து பணி செய்யலாம். 3 நாட்கள் மட்டுமே அலுவலகம் செல்ல வேண்டி இருக்கும்.

இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி என்பது இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் Cognizant இணையதளம் மூலம் முன்கூட்டியே விண்ணப்பம் செய்ய வேண்டும். ஏனென்றால் எப்போது வேண்டுமானாலும் இந்த பணிக்கான விண்ணப்பம் செய்யும் முறை முடிவுக்கு வரலாம்.

பணி பற்றிய அறிவிப்பை பார்த்து விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+