Cognizant-ல் அசத்தலான வேலைவாய்ப்பு.. சென்னையிலேயே பணி.. வெளியானது புதிய அறிவிப்பு
சென்னை: சென்னை காக்னிசண்ட் நிறுவனத்தில் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கான தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் தேதி முடிவதற்குள் விண்ணப்பித்து பயன் பெறலாம்.
இந்தியாவில் உள்ள முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்று காக்னிசண்ட் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ் கார்ப்பரேஷன்(Cognizant Technology Solutions Corporation). சுருக்கமாக காக்னிசண்ட் என்று அழைக்கப்படுகிறது.

இந்த நிறுவனம் என்பது நிதி, சுகாதாரம், சில்லறை வர்த்தகம் உள்பட பல்வேறு துறை தொடர்பான சேவைகளை வழங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் சென்னை கிளையில் தற்போது ஆட்சேர்ப்பு நடத்தப்படுகிறது. அதன் விபரம் வருமாறு:
தற்போதைய அறிவிப்பின்படி காக்னிசண்ட் நிறுவனத்தில் DevOps Engineer Associate என்ற பொறப்புக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்தபணிக்கு ஏதாவது ஒரு டிகிரியை முடித்திருக்க வேண்டும். 2020, 2021, 2022, 2023, 2024 ஆகிய ஆண்டுகளில் படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.
விண்ணப்பம் செய்வோர் கான்பிகரேன் மேனேஜ்மென்ட்டுக்கான பிளேபுக்/குக் புக் டெவலப் செய்ய தெரிந்திருக்க வேண்டும். குளோட் இன்ப்ஃராஸ்ட்ரக்ச்சரில் டூல்ஸ் இன்ஸ்டால் செய்ய தெரிந்திருக்க வேண்டம். ஹைவர்வைசர் பிரச்சனையை தீர்க்க தெரிந்திருக்க வேண்டும். CI/ CD, DevOps Concepts, Azure ஆகியவை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
இந்த பணிக்கான சம்பளம் குறித்த விபரம் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும் ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் Cognizant இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி குறிப்பிடப்படவில்லை. இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் முன்கூட்டியே விண்ணப்பம் செய்வது நல்லது.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications