Hybrid முறையில் வேலைவாய்ப்பு.. அழைக்கும் Cognizant.. சென்னையில் பணி நியமனம்.. மிஸ் பண்ணாதீங்க!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும் காக்னிசண்ட் ஐடி நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு என்பது வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் ஹைபிரிட் முறையில் பணியாற்ற அனுமதிக்கப்பட உள்ளனர்.

நிதி, சுகாதாரம், சில்லறை வர்த்தகம் உள்பட பல்வேறு துறைகளில் தேவையான டெக்னாலஜி சார்ந்த சேவைகளை வழங்கி வரும் நிறுவனமாக காக்னிசண்ட் (Congnizant)செயல்பட்டு வருகிறது. முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக உள்ள இங்கு பல்வேறு வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்புகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.

it jobs job jobs

அந்த வகையில் தற்போது சென்னையில் உள்ள காக்னிசண்ட் நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:

காக்னிசண்ட் நிறுவனத்தில் எக்ஸிக்கியூட்டிவ் (Executive) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு எத்தனை பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர் என்பது பற்றிய விபரம் என்பது தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும் அதிகமானவர்கள் தேர்வு செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.

இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோருக்கு கண்டிப்பாக 3 வகையான ஸ்கில்ஸ் இருக்க வேண்டும். அதன்படி Accounting Strategies, MS Excel, Accounts Receivable உள்ளிட்டவை கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டும். இதுதவிர ஆங்கிலத்தில் பேசவும், எழுதவும் தெரிந்திருந்தால் அது விண்ணப்பத்தாரர்களுக்கு பிளஸ் பாயிண்டாக இருக்கும்.

மேலும் டெக்னாலஜி தொடர்பான விபரங்களை விரைவாக கற்று கொள்ளும் திறமை இருக்க வேண்டும். இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் உள்ள காக்னிசண்ட் நிறுவனத்தில் பணியமர்த்தப்பட உள்ளனர். மேலும் இந்த நிறுவனத்தில் ஹைபிரிட் (Hybrid) முறை நடைமுறையில் உள்ளது. இதன்மூலம் வாரம் குறைந்தபட்சம் 2 நாட்கள் வீடுகளில் இருந்தபடியே வேலை செய்ய முடியும். மாறாக வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே அலுவலகம் சென்றால் போதுமானது.

இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் Cognizant இணையதளம் சென்று உடனடியாக விண்ணப்பம் செய்யலாம். பணிக்கான கடைசி விண்ணப்ப தேதி என்பது குறிப்பிடப்படவில்லை. இதனால் முன்கூட்டியே விண்ணப்பம் செய்வது நல்லது. அதேபோல் தற்போதைய அறிவிப்பில் மாதசம்பளம் அல்லது ஆண்டு சம்பளம் பற்றிய விபரமும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி பைனல் இன்டர்வியூவின்போது நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

பணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+