Excel தெரிந்தால் போதும்.. காக்னிசண்ட் நிறுவனம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! மிஸ் பண்ணாதீங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை காக்னிசண்ட் ஐடி நிறுவனத்தில் காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு Excel தெரிந்து ஓராண்டு முதல் 2 ஆண்டு பணி அனுபவம் கொண்டவர்கள் விண்ணப்பம் செய்யலாம். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

தமிழகத்தில் ஏராளமான ஐடி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அதில் முக்கியமான நிறுவனம் காக்னிசண்ட் (Cognizant). இந்த நிறுவனம் தமிழகத்தில் சென்னை, கோவை உள்ளிட்ட இடங்களில் செயல்பட்டு வருகிறது.

it jobs job

இந்நிலையில் தான் காக்னிசண்ட் நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:

காக்னிசண்ட் நிறுவனத்தில் தற்போது ப்ராசஸ் எக்ஸிக்கியூட்டிவ் - டேட்டா (Process Executive - Data) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோருக்கு குறைந்தபட்சம் ஓராண்டு முதல் அதிகபட்சமாக 2 ஆண்டு வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் MS Excel-ல் நல்ல டெக்னிக்கல் ஸ்கில்ஸ் தெரிந்திருக்க வேண்டும். அனலிட்டிக்கல் ஸ்கில்ஸ் மற்றும் பிரச்சனைகளை தீர்க்கும் திறன் இருக்க வேண்டும். அதேபோல் நல்ல கம்யூனிகேஷன் திறமை இருப்போடு, கொலாபிரேஷன் ஸ்கில்ஸ் இருக்க வேண்டும். மேலும் கன்சூமர் லென்டிங் கார்ட்ஸ் மற்றும் பேமெண்ட்ஸ் டொமைனில் பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும்.

பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் உள்ள காக்னிசண்ட் அலுவலகத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர். இது ஒரு ஹைபிரிட் வகை பணியாகும். இதனால் வாரத்தில் 5 நாட்களும் அலுவலகம் செல்ல வேண்டியது இல்லை. சில நாட்கள் வீட்டில் இருந்தே பணியாகும். தற்போது பணிக்கான சம்பளம் பற்றிய எந்த விபரமும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவின்போது தெரிவிக்கப்பட உள்ளது.

தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் முறைப்படி ஆன்லைனில் விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை. இதனால் எப்போது வேண்டுமானாலும் விண்ணப்ப தேதி முடியலாம் என்பதால் சீக்கிரமாக விண்ணப்பம் செய்வது நல்லது.

பணிக்கான அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+