கோவையில் ஐடி வேலை.. அனுபவம் இல்லாதவர்களும் விண்ணப்பிக்கலாம்.. Cognizant தரும் சூப்பர் வாய்ப்பு
கோவை: கோவையில் செயல்பட்டு வரும் காக்னிசண்ட் ஐடி நிறுவனம் சார்பில் புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு பணி அனுபவம் இல்லாதவர்களும் விண்ணப்பம் செய்யலாம்.
முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக காக்னிசண்ட் (Cognizant) உள்ளது. Cognizant Technology Solutions Corporation எனும் இந்த நிறுவனம் தமிழகத்தில் சென்னை, கோவையில் இயங்கி வருகிறது.

இந்நிலையில் தான் கோவையில் செயல்பட்டு வரும் காக்னிசண்ட் நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:
கோவை காக்னிசண்ட் நிறுவனத்தில் தற்போது ப்ராசஸ் எக்ஸிக்கியூட்டிவ் - டேட்டா (Process Executive - Data) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு ஹேல்த்கேர் புராடெக்ஸ்ட் பில்லிங் மற்றும் கமர்சியல் இன்சூரன்ஸ் என்ரோல்மென்ட் உள்ளிட்ட பிரிவில் 0 - 2 ஆண்டு பணி அனுபவம் கொண்டவர்கள் விண்ணப்பம் செய்யலாம். இதன்மூலம் பணி அனுபவம் இல்லாதவர்கள் கூட விண்ணப்பிக்க முடியும்.
இருப்பினும் விண்ணப்பம் செய்வோருக்கு சில முக்கிய தகுதிகள் இருக்க வேண்டும். அதன்டி ஹெல்த்கேர் புராடெக்ஸ்ட் கையாண்ட அனுபவம், பில்லிங் மற்றும் கமர்சியல் இன்சூரன்ஸ் என்டோல்மென்ட் செய்ய தெரிந்திருக்க வேண்டு்ம. அதோடு டேட்டா என்ட்ரி மற்றும் மேனேஜ்மென்ட், நல்ல கம்யூனிகேஷன் ஸ்கில்ஸ் இருக்க வேண்டும்.
இதுதவிர நைட்ஷிப்ட்டில் பணியாற்ற தயாராக இருக்க வேண்டும். அதேபோல் கஸ்டமர் சென்ட்ரிக் மைண்ட்செட் இருக்க வேண்டும்.
பணிக்கு தேர்வாகும் நபர்கள் கோவையில் உள்ள காக்னிசண்ட் அலுவலகத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர். தற்போது பணிக்கான சம்பளம் பற்றிய எந்த விபரமும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவின்போது தெரிவிக்கப்பட உள்ளது.
இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளனர்கள் முறைப்படி ஆன்லைனில் விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை. இதனால் எப்போது வேண்டுமானாலும் விண்ணப்ப தேதி முடியலாம் என்பதால் சீக்கிரமாக விண்ணப்பம் செய்வது நல்லது.
பணிக்கான அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications