Excel தெரியுமா? அனுபவம் வேண்டாம்.. கோவையிலேயே பணி.. அழைக்கும் Cognizant
கோவை: கோவையில் செயல்பட்டு வரும் காக்னிசண்ட் ஐடி நிறுவனம் சார்பில் புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. Excel-ல் 0 முதல் 1 ஆண்டு பணி அனுபவம் கொண்டவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.
முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக காக்னிசண்ட் (Cognizant) உள்ளது. Cognizant Technology Solutions Corporation எனும் இந்த நிறுவனம் தமிழகத்தில் சென்னை, கோவையில் இயங்கி வருகிறது.

இந்நிலையில் தான் கோவையில் செயல்பட்டு வரும் காக்னிசண்ட் நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:
கோவை காக்னிசண்ட் நிறுவனத்தில் தற்போது ப்ராசஸ் எக்ஸிக்கியூட்டிவ் - டேட்டா (Process Executive - Data) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். விண்ணப்பம் செய்வோர் குறிப்பிட்ட இந்த பிரிவில் 0 முதல் ஓராண்டு வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். இதன்மூலம் அனுபவம் இல்லாதவர்களும் விண்ணப்பம் செய்யலாம். மேலும் பணிக்கு பிரத்யேகமாக கல்வி தகுதி எதுவும் குறிப்பிடப்படவில்லை. ஆனால் விண்ணப்பம் செய்வோருக்கு சில முக்கிய தகுதிகள் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி விண்ணப்பம் செய்வோருக்கு MS Excel-ல் டேட்டா மனிபுலேசன் (Data Manipulation) மற்றும் அனலிசிஸ் தெரிந்திருக்க வேண்டும். அதேபோல் Pre-adjudication மற்றும் Commercial claims processing தெரிந்திருக்க வேண்டும். அதேபோல் ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். நைட் ஷிப்ட்டில் பணியாற்ற தயாராக இருக்க வேண்டும். அதேபோல் பிரச்சனைகளை தீர்க்கும் திறன் கொண்டிருக்க வேண்டும்.
பணிக்கு தேர்வாகும் நபர்கள் கோவையில் உள்ள காக்னிசண்ட் அலுவலகத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர். தற்போது பணிக்கான சம்பளம் பற்றிய எந்த விபரமும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவின்போது தெரிவிக்கப்பட உள்ளது.
இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் முறைப்படி ஆன்லைனில் விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை. இதனால் எப்போது வேண்டுமானாலும் விண்ணப்ப தேதி முடியலாம் என்பதால் சீக்கிரமாக விண்ணப்பம் செய்வது நல்லது.
பணிக்கான அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
என் மகனுக்கே வேலை இல்லைங்க? அடோப் நிறுவன இயக்குனரே லிங்க்டு-இன் தளத்தில் வேண்டுகோள் -
மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் நெல்லையில் வேலை! 82 காலியிடங்கள்.. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications