டிகிரி ஓகே.. கோவை Cognizant-ல் புதிய வேலைவாய்ப்பு! வாரம் 3 நாள் மட்டும் அலுவலகம் போனால் போதும்

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவையில் இயங்கி வரும் காக்னிசண்ட் (Congnizant) ஐடி நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் Hybrid முறையில் வாரத்தில் 3 நாட்கள் அலுவலகத்திலும், 2 நாட்கள் வீட்டில் இருந்தும் பணி செய்யலாம்.

நம் நாட்டில் ஏராளமான ஐடி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக காக்னிசண்ட் (Cognizant Technology Solutions Corporation) இயங்கி வருகிறது. தமிழகத்தில் சென்னை, கோவை உள்ளிட்ட இடங்களில் இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

it jobs job

இந்நிலையில் தான் தற்போது அடுத்தடுத்து இந்த நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் என்பது வெளியாகி வருகின்றன. அந்த வகையில் தற்போது கோவை காக்னிசண்ட் நிறுவனத்தில் காலிப்பணியிடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.

தற்போதைய அறிவிப்பின்படி காக்னிசண்ட் நிறுவனத்தில் ப்ராசஸ் எக்ஸிக்கியூட்டிவ் (Process Executive) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்ட உள்ளனர். இந்த பணிக்கு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். இருப்பினும் பிஇ, பிடெக், பிசிஏ, எம்சிஏ, எம்பிஏ, எம்எஸ்சி படித்தவர்களை தவிர மற்றவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.

விண்ணப்பம் செய்வோர் அமெரிக்காவின் Inbound/Outbound கால்ஸ் பேசிய அனுபவம் கொண்டிருக்க வேண்டும். எம்எஸ்ஆபிஸ் அறிவு பெற்றிருக்க வேண்டும்.வெவ்வேறு ஷிப்ட்டுகளில் பணியாற்ற தயாராக இருக்க வேண்டும். மேலும் டீம் பிளேயராக இருக்க வேண்டும். இவை எல்லாவற்றுக்கும் மேலாக ஆங்கிலத்தில் நன்றாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.

இந்த பணிக்கான சம்பளம் குறித்த விபரம் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்படவில்லை. தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் சம்பளம் நிர்ணயம் செய்யப்பட உள்ளது. இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் கோவையில் பணியமர்த்தப்பட உள்ளனர். இது ஒரு ஹைபிரிட் (Hybrid) முறையிலான பணியாகும். இதனால் வாரத்தில் 2 நாட்கள் வீட்டில் இருந்தும், வாரத்தில் 3 நாட்கள் அலுவலகத்தில் இருந்தும் வேலை செய்ய முடியும்.

தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இந்த பணிக்கு Cognizant அலுவலகத்தின் இணையதள பக்கத்தில் இருந்து விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி என்பது குறிப்பிடப்படவில்லை. இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் Cognizant இணையதளம் மூலம் முன்கூட்டியே விண்ணப்பம் செய்ய வேண்டும்.

பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+