Cognizant வேலைவாய்ப்பு.. வாரத்தில் 3 நாள் மட்டுமே அலுவலகம் சென்றால் போதும்.. கோவையில் பணி..

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவையில் இயங்கி வரும் காக்னிசண்ட் (Congnizant) ஐடி நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் Hybrid முறையில் வாரத்தில் 3 நாட்கள் அலுவலகத்திலும், 2 நாட்கள் வீட்டில் இருந்தும் பணி செய்யலாம்.

உலகளவில் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக காக்னிசண்ட் செயல்பட்டு வருகிறது. Cognizant Technology Solutions Corporation என அழைக்கப்படும் இந்த நிறுவனம் நம் நாட்டிலும் இயங்கி வருகிறது.

it jobs job jobs

இந்நிலையில் தான் கோவை காக்னிசண்ட் நிறுவனத்தில் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கான முக்கிய தகவல்கள் வருமாறு:

தற்போதைய அறிவிப்பின்படி காக்னிசண்ட் நிறுவனத்தில் டெக்னிக்கல் லீட் (Technical Lead) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோருக்கு Splunk Admin Grafana Datadog தெரிந்திருக்க வேண்டும். இதுதொடர்பான சர்டிபிகேட் வைத்திருக்க வேண்டும்.

மேலும் குறிப்பிட்ட இந்த பிரிவில் 4 முதல் 8 ஆண்டுகள் பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் பிரச்சனைகளை தீர்க்கும் திறன் கொண்டிருக்க வேண்டும். ஹெல்த் மேட்ரிக்ஸ் மற்றும் விஷூவலைஸ் சிஸ்டம் பெர்பாமன்ஸ் ரிப்போர்ட் மற்றும் டெவலப் மற்றும் மெயின்டெயின் செய்ய வேண்டி இருக்க வேண்டும். மானிட்டரிங் டூல்ஸ் மற்றும் டெக்னிக்ஸ் பற்றிய டிரெய்னிங் மற்றும் மென்டார்ஷிப் செய்ய வேண்டி இருக்கும்.

இதுதுவிர நல்ல கம்யூனிகேசன் திறமை இருக்க வேண்டும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கான சம்பளம் குறித்த விபரம் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்படவில்லை. தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் சம்பளம் நிர்ணயம் செய்யப்பட உள்ளது.

இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் கோவையில் பணியமர்த்தப்பட உள்ளனர். விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி என்பது குறிப்பிடப்படவில்லை. இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் Cognizant இணையதளம் மூலம் முன்கூட்டியே விண்ணப்பம் செய்ய வேண்டும்.

பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+