Work From Home வசதியும் உண்டு.. Cognizant தரும் சூப்பர் வேலைவாய்ப்பு.. சென்னையில் பணி
சென்னை: காக்னிசண்ட் நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். அதுமட்டுமின்றி Work From Home வசதியும் வழங்கப்பட உள்ளது.
முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான Cognizant-ல் இருந்து புதிய வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் என்பது வெளியாகி வருகிறது. அந்த வகையில் தற்போது சென்னையில் இயங்கும் காக்னிசண்ட் நிறுவனத்தில் பணியாற்ற ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

அதுபற்றிய முக்கிய விவரங்கள் வருமாறு: தற்போதைய அறிவிப்பின்படி சென்னை காக்னிசண்ட் நிறுவனத்தில் அசோசியேட் - ப்ராஜெக்ட்ஸ்(Associate - Projects) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இந்த பணிக்கு பைத்தானில் குறைந்தபட்சம் 3 ஆண்டு முதல் 5 ஆண்டு பணி அனுபவம் கொண்டவர்கள் விண்ணப்பம் செய்யலாம். வெப் பிரேம் வொர்க்ஸ்களான Django அல்லது Flask-ல் பணியாற்றிய அனுபவம் கொண்டிருக்க வேண்டும். Git, டேட்டாபேஸ் மேனேஜ்மென்ட் சிஸ்டம் SQL, NoSQL பற்றிய புரிதல் இருக்க வேண்டும்.
அதேபோல் RESTful API design மற்றும் டெவலப்மென்ட், ப்ரண்ட் எண்ட் டெக்னாலஜிக்கான எச்டிஎம்எல் (HTML), சிஎஸ்எஸ் (CSS), ஜாவா ஸ்கிரிப்ட் (Java Script) ஆகியவற்றை புரிந்து வைத்திருக்க வேண்டும். அதேபோல் Cloud Platforms-களான AWS or Azure மற்றும் Docker உள்ளிட்டவற்றில் பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும்.
இதுதவிர பிரச்சனைகளை தீர்க்கும் திறன், டீமாகவும், தனியாகவும் பணியாற்ற தயாராக இருக்க வேண்டும். நல்ல கம்யூனிகேஷன் திறமை இருக்க வேண்டும். புதிய தொழில்நுட்பங்களை கற்கும் திறன் இருக்க வேண்டும். Certified Python Developer AWS Certified Developer அல்லது அதற்கு நிகரான தகுதியை பெற்றிருக்க வேண்டும்.
இந்த பணிக்கான மாத சம்பளம் குறித்த விபரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் காக்னிசண்ட் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் சென்று ஆன்லைனில் விண்ணப்பம் செய்யலாம்.
விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி எதுவும் குறிப்பிடப்படவில்லை. இதனால் உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது. இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை காக்னிசண்ட் நிறுவனத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர். இது ஹைபிரிட் (Hybrid) மாடல் பணியாகும். இதனால் அலுவலகம் செல்லாமல் வீட்டில் இருந்தும் வாரத்தில் சில நாட்கள் பணியாற்ற முடியும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications