கோவையில் ஐடி வேலை.. நாளை ஆன்லைனில் இண்டர்வியூ.. அழைக்கும் காக்னிசண்ட்
கோவை: கோவையில் செயல்பட்டு வரும் காக்னிசண்ட் ஐடி நிறுவனத்தில் காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கான இண்டர்வியூ நாளை (ஜூன் 7 ) ஆன்லைனில் நடைபெற உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் பதிவு செய்து இண்டர்வியூவில் பங்கேற்கலாம்.
காக்னிசண்ட் ஐடி நிறுவனத்தில் தற்போதுஆட்மோமேஷன் டெஸ்டர் (Automation Testers) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு ஜாவா செலினியம் (Java Selenium)/ ஜாவா செலினியம் + பைத்தான் (Java Selenium Python)/ஜாவா செலினியம் + அபியம்(Java Selenium + Appium) ஆகியவை தெரிந்திருக்க வேண்டும்.

அதேபோல் குறிப்பிட்ட பிரிவில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 6 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும். இந்த பணியை விரும்புவோர் முறைப்படி அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வழியாக விண்ணப்பம் செய்ய வேண்டும். இப்படி விண்ணப்பம் செய்த பிறகு இண்டர்வியூ நேரம் பற்றிய அறிவிப்பு தனிப்பட்ட முறையில் காக்னிசண்ட் நிறுவனத்தில் இருந்து அனுப்பி வைக்கப்படும்.
இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் கோவையில் நியமனம் செய்யப்படுவார்கள். தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான சம்பளம் குறித்த விவரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். நாளை இண்டர்வியூ என்பதால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இன்றே விண்ணப்பம் செய்வது நல்லது.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here


Click it and Unblock the Notifications
