16 பிரிவில் பணி.. Cognizant தரும் செம வாய்ப்பு.. பிப்ரவரி 1ம் தேதி 2 இடங்களில் இண்டர்வியூ
சென்னை: காக்னிசண்ட் ஐடி நிறுவனத்தில் 16 வகையான பணிக்கு தேவையான ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான இண்டர்வியூ என்பது பிப்ரவரி மாதம் 1ம் தேதி 2 இடங்களில் நடைபெற உள்ளது.
முன்னணி ஐடி நிறுவனமான காக்னிசண்ட் நிறுவனம் தமிழ்நாட்டில் சென்னை, கோவையில் செயல்பட்டு வருகிறது. இதுதவிர நம் நாட்டின் பல்வேறு இடங்களில் இந்த நிறுவனம் இயங்கி வருகிறது.

இந்நிலையில் தான் தற்போது காக்னிசண்ட் நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:
காக்னிசண்ட் நிறுவனத்தில் தற்போது பல்வேறு பணிகளுக்கு தேவையான ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். அதன்படி 16 வகையான ஸ்கில்ஸ் இருப்பவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்யலாம். அதன்படி பார்த்தால் AzureDatabricks, AWSServices, Python, Pyspark, GCP, DataStage, Azuredatafactory, PowerBI, Sparkscala, Datascience, MDM, InformaticaIICS, Abinitio, Tableau, MSBI(SSIS,SSRS,SSAS), Snowflake உள்ளிட்ட ஸ்கில்ஸ் இருப்பவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.
மேலும் குறிப்பிட்ட பிரிவில் குறைந்தபட்சம் 5 ஆண்டு முதல் 12 ஆண்டு வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். இந்த பணிக்கான இண்டர்வியூ என்பது பிப்ரவரி மாதம் 1ம் தேதி நடைபெற உள்ளது. இண்டர்வியூ என்பது 2 இடங்களில் நடைபெற உள்ளது. கொச்சி மற்றும் கொல்கத்தா ஆகிய இடங்களில் இண்டர்வியூ நடைபெற இருக்கிறது.
கொச்சியில் இண்டர்வியூவில் பங்கேற்க வேண்டும் என்று நினைப்போர் பிப்ரவரி 1ம் தேதி Kochi Cognizant Technology Solutions, Infopark Phase 2, Kakkanad, Kochi, Kerala 682030 என்ற முகவரிக்கு செல்ல வேண்டும். அதேபோல் கொல்கத்தாவில் இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் Cognizant Technology Solutions India Private Limited(IN263), 6th Floor in Tower G-2, Candor Kolkata 700156 என்ற முகவரிக்கு செல்ல வேண்டும்.
இது ஒரு PAN INDIA பணியாகும். இதனால் பணிக்கு தேர்வாகும் நபர்கள் நம் நாட்டில் எங்கு வேண்டுமானாலும் நியமனம் செய்யப்படலாம். அதிர்ஷ்டம் இருப்பின் சென்னை, கோவையில் கூட பணி வாய்ப்பு என்பது கிடைக்கும். அதேபோல் சம்பளம் என்பது பணி அனுபவத்தின் அடிப்படையில் வழங்கப்பட உள்ளது.
பணிக்கான அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications