18 பிரிவுகளில் காலியிடம்.. Cognizant வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. சென்னையில் நாளை இண்டர்வியூ
சென்னை: காக்னிசண்ட் ஐடி நிறுவனத்தில் 18 பிரிவுகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கான இண்டர்வியூ என்பது நாளை (ஜனவரி 11) சென்னையில் நடைபெற உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இந்த இண்டர்வியூவில் பங்கேற்கலாம் .
பலருக்கும் ஐடி நிறுவனத்தில் வேலை செய்ய வேண்டும் என்பது பெரும் கனவாக உள்ளது. தமிழகத்தில் முன்னணி ஐடி நிறுவனமான காக்னிசண்ட் (Cognizant) சார்பில் அடுத்தடுத்து புதிய வேலைவாய்ப்புகள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில் தான் சென்னையில் இயங்கி வரும் காக்னிசண்ட் நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:
காக்னிசண்ட் நிறுவனத்தில் தற்போது 18 பிரிவுகளில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பபப்பட உள்ளது. அதன்படி Pyspark, Google cloud platform Services, Databricks, Datastage, MSFT Power BI, Python, Snowflake, Tableau, Teradata, Azure data factory, Abinitio, IICS, AWS Services, ETL Validation, Javafullstack, Informatica, AWS Services with AWS Quicksight Demand, Qliksense உள்ளிட்ட பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இவை அனைத்தும் டெவலப்பர் வகையை சேர்ந்த பணியாகும். இந்த பணிகளுக்கு குறிப்பிட்ட பிரிவில் குறைந்தபட்சம் 4 முதல் 12 ஆண்டு வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். இந்த பணி அனுபவம் கொண்டவர்கள் பணிக்கான இண்டர்வியூ என்பது சென்னையில் ஜனவரி 11ம் தேதி (நாளை) நடைபெற உள்ளது.
இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் அன்றைய தினம் Cognizant Technology Solutions, Cafeteria SDB-3, 1st Floor, Elcot, CKC, Sholinganallur, Chennai என்ற முகவரிக்கு செல்ல வேண்டும். ஜனவரி 11ம் தேதி மதியம் 1 மணி வரை செல்வோருக்கு இண்டர்வியூவில் பங்கேற்க அனுமதியுண்டு. அதன்பிறகு செல்வோருக்கு அனுமதியில்லை.
இதனால் திட்டமிட்டு 1 மணிக்கு முன்பாக இண்டர்வியூ நடக்கும் இடத்துக்கு செல்வது நல்லது. இதன்மூலம் கடைசிக்கட்ட பரபரப்பை தவிர்க்கலாம். மேலும் தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான சம்பளம் பற்றிய விபரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. பணி அனுபவம் மற்றும் திறமையின் அடிப்படையில் சம்பளம் என்பது நிர்ணயம் செய்யப்படலாம். அதுபற்றிய கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படலாம்.
இண்டர்வியூவுக்கு செல்வோர் Resumes மற்றும் பாஸ்போர்ட் சைஸ் போட்டோவை வைத்திருக்க வேண்டும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை அல்லது பிற காக்னிசண்ட் நிறுவனத்தில் நியமனம் செய்யப்பட வாய்ப்புள்ளது. இதுபற்றியும் இண்டர்வியூவின்போது தெரிவிக்கப்படும்.
பணிக்கான அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications