ரூ.6.75 லட்சம் சம்பளம் + காக்னிசண்ட் வேலை.. விண்ணப்ப தேதி நீட்டிப்பு.. சென்னை, கோவையில் பணி
சென்னை: முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான காக்னிசண்ட்டில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வதற்கான தேதி மார்ச் 14ம் தேதியாக நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. தேர்வாகும் நபர்களுக்கு ஆண்டுக்கு ரூ.4 லட்சம் முதல் ரூ.6.75 லட்சம் வரை சம்பளம் என்பது வழங்கப்பட உள்ளது.
முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக காக்னிசண்ட் (Cognizant) சார்பில் தொடர்ந்து பல்வேறு பிரிவுகளில் காலிப்பணியிடங்கள் என்பது நிரப்பப்பட்டு வருகிறது.

அந்த வகையில் காக்னிசண்ட் சார்பில் தற்போது வெளியாகி உள்ள அறிவிப்பின் முக்கிய விபரங்கள் வருமாறு: அதன்படி தற்போது காக்னிசண்ட் நிறுவனத்தில் இன்ஜினியரிங் கிராசூவேட்களுக்கான GenC Next, GenC and Gen C பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு ஆண்டுக்கு குறைந்தபட்சமாக ரூ.4 லட்சம் வழங்கப்படும். அதிகபட்சம் என்றால் ரூ.6.75 லட்சம் வரை சம்பளம் என்பது வழங்கப்படும். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 2024ம் ஆண்டில் பிஇ, பிடெக், எம்இ, எம்டெக் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
லெதர் டெக்னாலஜி, ஃபுட் டெக்னாலஜி, பேஷன் டெக்னாலஜி படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்ய முடியாது. மற்றவர்கள் என்றால் 60 சதவீத மதிப்பெண்ணுடன் 10, பிளஸ் 2, டிப்ளமோ, யுஜி, பிஜி படிப்பை முடித்திருக்க வேண்டும். 59.9 சதவீத மதிப்பெண்ணுடன் படிப்பை முடித்தவர்களுக்கும், அரியர்ஸ் இருப்பவர்களுக்கும் அனுமதியில்லை.
இந்த பணிக்கு Cognizant இணையதளம் வழியாக விண்ணப்பம் செய்ய மார்ச் 7 ம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டது. தற்போது அந்த தேதி என்பது நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அதன்படி மார்ச் 14ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும்என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. அன்றைய தினம் இரவு 11.59 மணிக்குள் விண்ணப்பம் செய்வது நல்லது. அதோடு விண்ணப்பத்தாரர்கள் எங்கு பணியமர்த்தப்பட்டாலும் அங்கு செல்ல தயாராக இருக்க வேண்டும். இந்த பணிக்கான விபரங்கள் அனைத்தும் Superset-ல் பதிவு செய்யப்படும் இ-மெயில் ஐடி மூலம் தான் தெரிவிக்கப்படும்
இதனால் சொந்த மெயில் ஐடியை வழங்க வேண்டும். ஒருமுறை இ-மெயில் முகவரி கொடுத்த பிறகு அதனை மீண்டும் மாற்றம் செய்ய முடியாது. எனவே கவனமாக சரியான இ-மெயில் முகவரியை கொடுக்க வேண்டும். இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் மொத்தம் 9 இடங்களில் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். இதில் தமிழகத்தை எடுத்து கொண்டால் சென்னை,
கோவையில் உள்ள காக்னிசண்ட் நிறுவனத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர். இதுதவிர பெங்களூர், ஹைதராபாத், புனே, கொல்கத்தா, புவனேஸ்வர், இந்தூரில் செயல்பட்டு வரும் காக்னிசண்ட் நிறுவனங்களிலும் பணியமர்த்தப்பட உள்ளனர்.
இந்த பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications