Cognizant வேலைவாய்ப்பு.. கோவையில் தான் இண்டர்வியூ.. பிப்ரவரி 8 ம் தேதியை மிஸ் பண்ணாதீங்க

Subscribe to Oneindia Tamil

கோவை: முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக காக்னிசண்ட் சார்பில் பிப்ரவரி 8 ம் தேதி கோவையில் இண்டர்வியூ என்பது நடைபெற உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் முன்கூட்டியே விண்ணப்பம் செய்து இண்டர்வியூவில் பங்கேற்கலாம்.

காக்னிசண்ட் ஐடி நிறுவனத்தில் இருந்து தொடர்ந்து பல்வேறு வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. தமிழகத்தை பொறுத்தவரை சென்னை, கோவையில் காக்னிசண்ட் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

it jobs job jobs

இந்நிலையில் தான் கோவையில் இயங்கும் காக்னிசண்ட் நிறுவனத்தில் வேலை தேடுவோருக்கு இண்டர்வியூ நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் விபரம் வருமாறு:

காக்னிசண்ட் சார்பில் தற்போது 5 ஸ்கில்ஸ்செட் உள்ளவர்களுக்கு வாய்ப்பு என்பது வழங்கப்பட உள்ளது. அதன்படி Pyspark Developer, Tableau + SQL, Snowflake, Stibo, Palantir உள்ளிட்ட ஸ்கில்ஸ் செட் உள்ளவர்கள் இண்டர்வியூவில் பங்கேற்கலாம். மேலும் குறிப்பிட்ட பிரிவில் குறைந்தபட்சம் 4 ஆண்டு முதல் 12 ஆண்டு வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

இண்டர்வியூ என்பது பிப்ரவரி 8 ம் தேதி நடைபெற உள்ளது. Face to Face முறையில் இண்டர்வியூ என்பது இருக்கும். இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் Cognizant Technologies, Chill Special Economic Zone, Keeranatham Village, Saravanampatti, Coimbatore - 641 035 என்ற முகவரிக்கு பிப்ரவரி 8 ம் தேதி செல்ல வேண்டும்.

தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான சம்பளம் குறித்த விபரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. பணி அனுபவம் மற்றும் திறமையின் அடிப்படையில் சம்பளம் என்பது நிர்ணயம் செய்யப்படலாம். அதோடு சம்பளம் குறித்து கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படலாம்.

மேலும் இந்த அறிவிப்பின்படி பணிக்கு தேர்வாகும் நபர்கள் எந்த லோகேஷனில் நியமனம் செய்யப்படுவார்கள் என்பது தெரிவிக்கப்படவில்லை. அதற்கு பதில் புராஜெக்ட்டை பொறுத்து பணி இடம் என்பது நிர்ணயம் செய்யப்படும் என்று மட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+