அனுபவம் வேண்டாம்.. BCA, B.Sc, BA, B.com முடித்தோரை அழைக்கும் Cognizant.. சென்னை - கோவையில் வேலை
சென்னை: காக்னிசண்ட் ஐடி நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு பிசிஏ, பிஎஸ்சி, பிஏ, பிகாம், பிபிஏ உள்பட பிரிவுகளில் 3 ஆண்டு கல்லூரி படிப்பை 2025ம் ஆண்டில் முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். பணி அனுபவம் தேவையில்லை. பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை, கோவை, பெங்களூர், ஹைதராபாத் உள்பட 9 இடங்களில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
காக்னிசண்ட் ஐடி நிறுவனத்தில் தற்போது அனலிஸ்ட் டிரெய்னி (Analyst Trainee) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இது Frehsersகளுக்கான வேலைவாய்ப்பாகும். இதனால் 2025ம் ஆண்டில் படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.

அதன்படி பார்த்தால் பிசிஏ, பிஎஸ்சி, பிஏ, பிகாம், பிபிஏ, BVoc, BMC உள்பட 3 ஆண்டு கல்லூரி படிப்பை 2025ம் ஆண்டில் முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். இவர்கள் 10, பிளஸ் 2, டிப்ளமோ, இளநிலை பட்டப்படிப்பு உள்ளிட்டவற்றில் 60 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். எந்த ஷிப்ட்டாக இருந்தாலும் பணியாற்ற தயாராக இருக்க வேண்டும்.
பணிக்கு தேர்வாகும் நபர்கள் 9 இடங்களில் நியமனம் செய்யப்பட உள்ளனர். அதன்படி சென்னை, கோவை, பெங்களூர், ஹைதராபாத், கொல்கத்தா, புனே, கொச்சி, புவனேஸ்வர், இந்தூர் உள்ளிட்ட இடங்களில் நியமனம் செய்யப்பட உள்ளனர். இதில் எந்த இடத்தில் நியமனம் செய்யப்பட்டாலும் பணி செய்ய தயாராக இருக்க வேண்டும்.
தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான சம்பளம் குறித்த விவரம் தெரிவிக்கப்படவில்லை. திறமையின் அடிப்படையில் சம்பளம் என்பது நிர்ணயம் செய்யப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய ஜூன் 15ம் தேதி கடைசி நாளாகும். இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் ஜூன் 15ம் தேதிக்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பயன்படுத்தி விண்ணப்பம் செய்யலாம்.
இவ்வாறு விண்ணப்பம் செய்வோரின் விண்ணப்பம் Screening செய்யப்படும். அதன்பிறகு ரவுண்ட் 1 என்ற முறையில் Communication Assessment இருக்கும். அதன்பிறகு ரவுண்ட் 2 வில் Aptitude Assessment இருக்கும். ரவுண்ட் 3யில் இண்டர்வியூ இருக்கும். இவை அனைத்தும் ஆன்லைனிலேயே நடைபெறும்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு!












Click it and Unblock the Notifications