Cognizant ஐடி வேலைவாய்ப்பு.. ஜூலை 12ம் தேதி இண்டர்வியூ.. ரெடியா?
சென்னை: முன்னணி ஐடி நிறுவனமான காக்னிசண்ட்டில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கான இண்டர்வியூ வரும் 12ம் தேதி நடைபெற உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் முறைப்படி விண்ணப்பம் செய்து இண்டர்வியூவில் பங்கேற்கலாம்.
முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக காக்னிசண்ட் (Cognizant) செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் இருந்து தற்போது அடுத்தடுத்து காலியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது வெளியாகி உள்ள அறிவிப்பின் முக்கிய விவரங்கள் வருமாறு:

நம் நாட்டில் பல்வேறு முக்கிய நகரங்களில் இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அதன்படி தமிழ்நாட்டில் சென்னை, கோவை, கேரளாவின் கொச்சி, கர்நாடகாவில் பெங்களூர், மங்களூர், ஆந்திராவில் ஹைதராபாத், மகாராஷ்டிராவில் மும்பை, புனே, ஒடிசா மாநிலம் புவனேஸ்வர், மேற்கு வங்கத்தில் கொல்கத்தா உள்ளிட்ட இடங்களில் காக்னிசண்ட் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் தான் காக்னிசண்ட் ஐடி நிறுவனத்தில் தற்போது டேட்டா பிரிக்ஸ் மற்றும் ஜென் ஏஐ (Data Bricks & Gen AI) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோருக்கு Azure Databricks, பைத்தானுடன் ஜென் ஏஐ (Gen AI with Python) ஸ்கில்செட்டாக இருக்க வேண்டும்.
தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான மாதசம்பளம் அல்லது ஆண்டு சம்பளம் பற்றிய விவரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். அதேபோல் இண்டர்வியூவுக்கான இடம் மட்டுமே அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பணி நியமனம் செய்யப்படும் இடங்கள் பற்றி தெரிவிக்கப்படவில்லை.
இந்த பணிக்கான இண்டர்வியூ ஜூலை 12ம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது. இண்டர்வியூ ஹைதராபாத்தில் நடைபெற உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் அன்றைய தினம் Raheja Mind Space, 12A Cognizant Building Hitex City, Madhapur, Hyderabad, Telangana 500081 என்ற முகவரிக்கு செல்ல வேண்டும்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications