Cognizant வேலைவாய்ப்பு.. பிப்ரவரி 8ல் இண்டர்வியூ.. சென்னையிலேயே பணி செய்ய சூப்பர் சான்ஸ்
சென்னை: காக்னிசண்ட் ஐடி நிறுவனத்தில் சென்னையில் பணியிடங்கள் நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான இண்டர்வியூ என்பது பிப்ரவரி 8 ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் அந்த இண்டர்வியூவில் பங்கேற்கலாம்.
தற்போது பலருக்கும் ஐடி நிறுவனங்களில் பணியாற்ற வேண்டும் என்ற விருப்பம் உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை, டிசிஎஸ், காக்னிசண்ட், ஜோஹோ, எச்சிஎல் உள்பட பல முன்னணி ஐடி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்த நிறுவனங்கள் சென்னை, கோவை, மதுரை உள்பட பல இடங்களில் செயல்பட்டு வருகிறது. காக்னிசண்ட் (Cognizant) நிறுவனம் தமிழகத்தில் சென்னை, கோவையில் இயங்கி வருகிறது.
இந்த நிறுவனத்தில் இருந்து தொடர்ந்து வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் தற்போது புதிய வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதுபற்றிய முழுவிவரங்கள் வருமாறு: காக்னிசண்ட் நிறுவனத்தில் தற்போது Pyspark Developer பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் சம்பந்தப்பட்ட பிரிவில் குறைந்தபட்சம் 4 முதல் 12 ஆண்டு வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். பிரைமரி ஸ்கில்லாக Pyspark Developer இருக்க வேண்டும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் நியமனம் செய்யப்பட உள்ளனர். பணிக்கான இண்டர்வியூ சென்னையில் பிப்ரவரி 8 ம் தேதி நடைபெற உள்ளது. இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் அன்றைய தினம் Cognizant Technology Solutions, CKC Campus, Chennai என்ற முகவரிக்கு செல்ல வேண்டும்.
எனவே இந்த பணியை விரும்புவோர் Resumes, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, உரிய ஆவணங்கள், சான்றிதழ்களுடன் இண்டர்வியூ நடக்கும் இடத்துக்கு செல்வது நல்லது. தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான சம்பளம் பற்றிய விபரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
பணி அனுபவம் மற்றும் திறமையின் அடிப்படையில் சம்பளம் என்பது நிர்ணயம் செய்யப்படலாம். அதுபற்றிய கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படலாம்.
பணிக்கான அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications