Cognizant வேலைவாய்ப்பு.. சென்னை, பெங்களூர் உள்பட 4 இடங்களில் பணி நியமனம்! செம வாய்ப்பு
சென்னை: முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக காக்னிசண்ட்டில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை, பெங்களூர், ஹைதராபாத், புனே உள்ளிட்ட நகரங்களில் பணியமர்த்தப்பட உள்ளனர்.
காக்னிசண்ட்.. Cognizant Technology Solutions Corporation என அழைக்கப்படும் பிரபல ஐடி நிறுவனத்தில் இருந்து காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் என்பது தொடர்ந்து வெளியாகி வருகிறது. அந்த வகையில் புதிய அறிவிப்பு குறித்த விபரம் வருமாறு:

காக்னிசண்ட் நிறுவனத்தில் தற்போது SAFe- Scrum Master பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் Agile frameworks-ல் நல்ல அறிவை பெற்றிருக்க வேண்டும். அதன்படி CSM/PSM, ICAgile,SAFe உள்ளிட்டவற்றில் சர்ட்டிபிகேஷன் பெற்றிருக்க வேண்டும். அதேபோல் அனுபவமும் இருந்தால் விண்ணப்பம் செய்வோருக்கு பிளஸ் பாயிண்ட்டாகும்.
மேலும்PI planning, sprints cadences,retrospectives,system demosஉள்ளிட்டவற்றை கோ-ஆடினேட் செய்ய வேண்டும். அதேபோல் Agile frameworks பற்றி கோச்/மென்டராக செயல்பட வேண்டியிருக்கும். நல்ல கம்யூனிகேசன் திறமை இருக்க வேண்டும்.
தற்போதைய அறிவிப்பின்படி சம்பளம் குறித்த தகவல் அறிவிப்பில் இல்லை. திறமையை பொறுத்து சம்பளம் என்பது நிர்ணயம் செய்யப்படலாம். அதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை, பெங்களூர், ஹைதராபாத், புனே உள்ளிட்ட 4 இடங்களில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் Cognizant இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி இன்னும் குறிப்பிடவில்லை. எனவே முன்கூட்டியே விண்ணப்பம் செய்வது நல்லது.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications