"வீட்டில் இருந்தே வேலை".. Excel-லில் பணியாற்றிய அனுபவம் போதும்.. அழைக்கும் Cognizant

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரபல ஐடி நிறுவனமான காக்னிசண்ட்டில் வீட்டில் இருந்து பணியாற்றும் வகையிலான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்யலாம்.

முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்று காக்னிசண்ட் (Cognizant அல்லது Cognizant Technology Solutions Corporation). இந்த நிறுவனம் பல்வேறு முக்கிய நகரங்களில் செயல்பட்டு வருகிறது.

it jobs job

தமிழகத்தை எடுத்து கொண்டால் சென்னை, கோவையில் காக்னிசண்ட் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்நிலையில் தான் காக்னிசண்ட் நிறுவனத்தில் இருந்து வீட்டில் இருந்தே பணியாற்றுவதற்கான வேலைவாய்ப்பு பற்றிய முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.

காக்னிசண்ட் நிறுவனத்தில் தற்போது சீனியர் புராசஸஅ எக்ஸிக்கியூட்டிவ் - டேட்டா (Senior Process Executive - Data) பணிக்கு தேவையான ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு என்று பிரத்யேகமாக எந்த கல்வி தகுதியும் குறிப்பிடப்படவில்லை. மாறாக விண்ணப்பம் செய்வோருக்கு சில விஷயங்கள் தெரிந்திருப்பதோடு, முன்அனுபவம் தேவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது விண்ணப்பம் செய்வோருக்கு டேட்டா அனலிசிஸ் உடன் எம்எஸ் எக்ஸலில் (MS Excel) பணியாற்றும் திறமை இருக்க வேண்டும். ஹெல்த்கேர் கால் சென்டரில் பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும். டீம் மெம்பர்ஸ் மற்றும் கஸ்டமர்களுடன் சகஜமாக உரையாடும் வகையில் நல்ல கம்யூனிகேஷன் திறமை இருக்க வேண்டும்.

பிரச்சனைகளை தீர்க்கும் திறன் இருப்பதோடு, ஐபிஆர் சிஸ்டம்ஸ் மற்றம் அதன் அப்ளிகேஷன் பற்றிய நல்ல புரிதல் இருக்க வேண்டும் (IVR Systems and their application in call centers). இதுதவிர மேற்கூறிய பணியில் குறைந்தபட்சம் 1 முதல் 4 ஆண்டு அனுபவம் கொண்டிருக்க வேண்டும். இதுதவிர Certified Healthcare Customer Service Professional (CHCSP) Microsoft Office Specialist (MOS) in Excel பெற்றிருக்க வேண்டும். தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான சம்பளம் பற்றிய எந்த விபரமும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவின்போது தெரிவிக்கப்படலாம்.

மேலும் இது ஒரு Remote வகை பணியாகும். இதனால் தேர்வாகும் நபர்கள் வீட்டில் இருந்தே பணியாற்றலாம். அலுவலகம் செல்ல தேவையில்லை. தகுதி மற்றும் விருப்பம் உள்ளனர்கள் முறைப்படி ஆன்லைனில் விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி இன்னும் குறிப்பிடப்படவில்லை. இதனால் முடிந்தவரை சீக்கிரமாக விண்ணப்பம் செய்வது நல்லது.

பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+