Cognizant வேலைவாய்ப்பு.. டிகிரி மட்டும் போதும்.. விண்ணப்ப தேதி நீட்டிப்பு - மிஸ் பண்ணாதீங்க
சென்னை: பிரபல ஐடி நிறுவனமான காக்னிசண்ட்டில் (Congnizant)இருந்து ITPT off Campus drive வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பு வெளியாகி இருந்தது. இதற்கான விண்ணப்ப தேதி ஆகஸ்ட் 7 நிர்ணயம் செய்யப்பட்டு இருந்த நிலையில் தற்போது ஆகஸ்ட் 14 என்று நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த பணிக்கு ஆகஸ்ட் 14ம் தேதிக்குள் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.
Cognizant Technology Solutions Corporation என்ற நிறுவனம் சுருக்கமாக Congnizant என அழைக்கப்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் சென்னை உள்பட பல இடங்களில் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் சார்பில் நிதி, சுகாதாரம், சில்லறை வர்த்தகம் உள்பட பல்வேறு துறை தொடர்பான சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தான் காக்னிசண்ட் நிறுவனத்தில் காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியானது. அதன்படி ITPT off Campus drive நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு ஆகஸ்ட் 7 ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. தற்போது இதற்கான தேதி என்பது ஆகஸ்ட் 14 என மாற்றம் செய்யப்பட உள்ளது.
தற்போதைய அறிவிப்பின்படி ITPT off Campus drive என்பது 3 ஆண்டு பட்டப்படிப்பை முடித்த அதன்படி விண்ணப்பம் செய்வோர் ஏதேனும் ஒரு பிரிவில் 2024ம் ஆண்டில் 3 ஆண்டு டிகிரி முடித்திருக்க வேண்டும். இவர்கள் 10, பிளஸ் 2 மற்றும் டிகிரி படிப்பை 60 சதவீத மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும். அரியர்ஸ் இருக்க கூடாது. கடைசி ஆண்டு ரிசல்ட்டுக்கு காத்திருப்போரும் விண்ணப்பம் செய்யலாம்.
மேலும் ஆங்கிலத்தில் நன்றாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். பிரச்சனைகளை தீர்க்கும் திறன், டைம் மேனேஜ்மென்ட், கிரியேட்டிவ் திறமை உள்ளிட்டவை இருக்க வேண்டும். மேலும் இந்தியாவில் எந்த இடத்தில் உள்ள அலுவலகத்தில் நியமனம் செய்தாலும் பணி செய்ய தயாராக இருக்க வேண்டும். அதுமட்டுமின்றி ஷிப்ட் அடிப்படையில் வேலை செய்ய ரெடியாக இருக்க வேண்டும்.
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் ஆகஸ்ட் மாதம் 14 ம் தேதிக்குள் நள்ளிரவு 11.59 மணிக்குள் Cognizant இணையதளம் சென்று விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பத்தில் உங்களின் சொந்த இ-மெயில் ஐடியை சரியாக குறிப்பிட வேண்டும். ஏனென்றால் பணி தொடர்பான விபரங்கள் அந்த இ-மெயில் முகவரிக்கு தான் Superset மூலம் அனுப்பி வைக்கப்படும். விண்ணப்பம் செய்யும்போது பாஸ்போர்ட் சைஸ் போட்டோவுடன் கூடிய பயோடேட்டாவை கண்டிப்பாக அப்டேட் செய்ய வேண்டும். மேலும் PAN Card கண்டிப்பாக இருக்க வேண்டும்.
மேலும் விண்ணப்பம் செய்வோருக்கு PAN Card-ல் பெயர் விவரங்கள் சரியாக இருக்க வேண்டும். அதில் விவரங்கள் தவறாக இருக்கும்பட்சத்தில் பணிக்கு தேர்வு செய்யப்படமாட்டார்கள். இதுதவிர நேர்க்காணலின்போது கல்லூரி அடையாள அட்டை, பள்ளி மற்றும் கல்லூரி படிப்புகளின் மார்க் ஷீட் கண்டிப்பாக இருக்க வேண்டும். பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு ஆண்டு சம்பளமாக தொடக்கத்தில் ரூ.2.52 லட்சம் வழங்கப்பட உள்ளது. அதன்படி பார்த்தால் மாதம் ரூ.21 ஆயிரம் சம்பளம் கிடைக்கும்.
பணி பற்றிய அறிவிப்பை பார்த்து ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications