சென்னையில் ஜனவரி 25ம் தேதி இண்டர்வியூ.. Cognizant ஐடி நிறுவனம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
சென்னை: காக்னிசண்ட் ஐடி நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கான இண்டர்வியூ என்பது சென்னையில் ஜனவரி 25ம் தேதி நடைபெறுகிறது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இந்த இண்டர்வியூவில் பங்கேற்கலாம்.
முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக காக்னிசண்ட் (Cognizant) சார்பில் தொடர்ந்து அடுத்தடுத்து வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்பு என்பது வெளியாகி வருகிறது. தமிழகத்தில் இந்த காக்னிசண்ட் நிறுவனம் சென்னை, கோவையில் இயங்கி வருகிறது.

இந்நிலையில் தான் ஜனவரி 25ம் தேதி சென்னையில் உள்ள காக்னிசண்ட் நிறுவனத்தில் இண்டர்வியூ நடைபெற உள்ளது. அதன் விபரம் வருமாறு:
காக்னிசண்ட் நிறுவனத்தில் தற்போது டெவலப்பர்ஸ் (Developers) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோருக்கு எஸ்ஏபி எம்டிஜி, இன்பர்மேஷன் எம்டிஎம், பைத்தான், கோலிபிரா டிக்யூ, இன்பர்மேஷன் சிடிக்யூ உள்ளிட்டவை தெரிந்திருக்க வேண்டும்.
அதேபோல் ஸ்டிபோ, மெஷின் லேர்னிங், எம்டிஎம் இன்டகிரேஷன், ஐபிஎம் எம்டிஎம், டேட்டா சயின்ஸ், ஐடிக்யூ, கூகுள் க்ளைவுட் எம்எல் உள்ளிட்டவை ஸ்கில்ஸாக இருக்க வேண்டும். அதோடு குறைந்தபட்சம் 3 ஆண்டு முதல் 6 ஆண்டு வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
இந்த பணிக்கான இண்டர்வியூ சென்னையில் ஜனவரி 25ம் தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம் Cognizant Technology Solutions, SEZ Avenue, Elcot SEZ, Sholinganallur, Chennai என்ற முகவரியில் வைத்து இண்டர்வியூ நடைபெற உள்ளது.
Resumes, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, உரிய ஆவணங்கள், சான்றிதழ்களுடன் இண்டர்வியூவில் பங்கேற்கலாம். தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான சம்பளம் பற்றிய விபரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. பணி அனுபவம் மற்றும் திறமையின் அடிப்படையில் சம்பளம் என்பது நிர்ணயம் செய்யப்படலாம். அதுபற்றிய கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படலாம்.
அதேபோல் தற்போதைய அறிவிப்பின்படி பணி நியமனம் செய்யப்படும் இடங்கள் பற்றிய விபரமும் தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும் அதிர்ஷ்டம் இருப்பின் சென்னை காக்னிசண்ட் நிறுவனத்தில் பணி நியமனத்தை பெறலாம்.
பணிக்கான அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
பெங்களூருக்கு வேட்டு! இந்தியாவிலேயே அதிக சம்பள உயர்வு கிடைக்கும் நகரம் எது தெரியுமா? -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ!












Click it and Unblock the Notifications