Cognizant நிறுவனத்தில் ஐடி வேலை.. பிப்ரவரி 1ம் தேதி இண்டர்வியூ.. செம வாய்ப்பு
சென்னை: முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக உள்ள காக்னிசண்ட் சார்பில் புதிய வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கான இண்டர்வியூ என்பது பிப்ரவரி 1ம் தேதி நடைபெற உள்ளது.
ஐடி நிறுவனங்களில் பணியாற்ற பலருக்கும் ஆசை உள்ளது. தற்போது பல்வேறு ஐடி நிறுவனங்களில் இருந்து தொடர்ச்சியாக வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் என்பது வெளியாகி வருகிறது.

அந்த வகையில் காக்னிசண்ட் நிறுவனத்தில் இருந்தும் தற்போது அடுத்தடுத்து வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. அதன்படி இப்போது வெளிவந்துள்ள வேலைவாய்ப்பு பற்றிய விபரம் வருமாறு:
காக்னிசண்ட் நிறுவனத்தில் தற்போது இன்பர்மேடிகா டெவலப்பர் (Informatica Developer) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு சம்பந்தப்பட்ட பிரிவில் குறைந்தபட்சம் 6 ஆண்டு முதல் அதிகபட்சம் 9 ஆண்டு வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
இந்த பணிக்கான இண்டர்வியூ என்பது பிப்ரவரி மாதம் 1ம் தேதி நடைபெற உள்ளது. இண்டர்வியூ என்பது COG Deccan Campus Cognizant Technology Solutions India Private Limited, Plot No.16, Phase III, Rajiv Gandhi Info tech Park, Hinjewadi, Pune, Pune MH 411057 என்ற முகவரியில் நடைபெறவுள்ளது. உரிய ஆவணங்களுடன் செல்ல வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது ஒரு PAN INDIA பணியாகும். இதனால் பணிக்கு தேர்வாகும் நபர்கள் நம் நாட்டில் எங்கு வேண்டுமானாலும் நியமனம் செய்யப்படலாம். அதிர்ஷ்டம் இருப்பின் சென்னையில் கூட பணி வாய்ப்பு என்பது கிடைக்கும். இப்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி பணிக்கான அறிவிப்பின்படி மாதசம்பளம் குறித்த விபரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. பணி அனுபவத்தின் அடிப்படையில் சம்பளம் என்பது நிர்ணயம் செய்யப்படும்.
இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் வரும் பிப்ரவரி மாதம் 1 ம் தேதி புனேவில் நடக்கும் காக்னிசண்ட் நிறுவனத்தின் இண்டர்வியூவில் உரிய ஆவணங்களுடன் சென்று பங்கேற்கலாம்.
பணிக்கான அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications