Cognizant நிறுவனத்தில் வேலை.. சென்னை - கோவையிலும் பணி வாய்ப்பு.. ஜூலை 15 கடைசி நாள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: காக்னிசண்ட் ஐடி நிறுவனத்தில் அனலிஸ்ட் டிரெய்னி (Analyst Trainee) உள்பட 2 பிரிவுகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு 2023, 2024ம் ஆண்டில் டிகிரி படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் செய்ய ஜூலை 15ம் தேதி கடைசி நாளாகும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை, கோவை, பெங்களூர், ஹைதராபாத் உள்பட 9 இடங்களில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக காக்னிசண்ட் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் இருந்து அடுத்தடுத்து வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்பு வெளியாகி வருகின்றன.

it jobs jobs job

அந்த வகையில் தற்போது காக்னிசண்ட் ஐடி நிறுவனத்தில் 2 வகையான பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கான கல்வி தகுதி உள்பட பிற விவரங்கள் வருமாறு:

முதலில் நாம் பார்ப்பது Analyst Trainee aligned to I and Integrated Smart Operations பணியாகும். இந்த பணிக்கு 2023 அல்லது 2024ம் ஆண்டில் டிகிரி படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். குறிப்பாக பிசிஏ, பிஎஸ்சி படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். பிஎஸ்சி என்றால் கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி (Allied Streams), கணிதம், இயற்பியல், வேதியியல், புள்ளியில், எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட படிப்புகளை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.

இவர்கள் 10, பிளஸ் 2, டிப்ளமோ, இளநிலை பட்டப்படிப்பு உள்ளிட்டவற்றில் 60 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். 59.9 சதவீத மதிப்பெண் பெற்றவர்கள் என்றால் விண்ணப்பம் செய்ய வேண்டும். டைம் மேனேஜ்மென்ட் ஸ்கில் இருக்க வேண்டும். ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். பிரச்சனையை தீர்க்கும் திறன், அனலிட்டிக்கல் ஸ்கில்ஸ், டீமாக சேர்ந்து பணியாற்றும் திறமை உள்ளிட்டவை இருக்க வேண்டும். குறைந்த நேரத்தில் வேகமாக பணியை முடிக்கவும், கடைசி நேரத்தில் ஏற்படும் பிழைகளை விரைவாக சரிசெய்யவும் தெரிந்திருக்க வேண்டும்.

தேர்வாகும் நபர்கள் மொத்தம் 9 இடங்களில் நியமனம் செய்யப்பட உள்ளனர். அதன்படி தமிழ்நாட்டில் சென்னை, கோவை, கர்நாடகாவில் பெங்களூர், தெலுங்கானாவில் ஹைதராபாத், மேற்கு வங்கத்தில் கொல்கத்தா, மகாராஷ்டிராவின் புனே, கேரளாவின் கொச்சி, ஒடிசாவின் புவனேஸ்வர், மத்திய பிரதேசத்தின் இந்தூர் உள்ளிட்ட இடங்களில் நியமனம் செய்யப்பட உள்ளனர். இதில் எந்த இடத்தில் நியமனம் செய்யப்பட்டாலும் பணி செய்ய தயாராக இருக்க வேண்டும்.

இதில் இரண்டாவதாக நாம் பார்க்கும் பணி Analyst Trainee aligned to Multicloud. இந்த பணிக்கு 2023, 2024ம் ஆண்டில் எந்த டிகிரி முடித்திருந்தாலும் விண்ணப்பம் செய்யலாம். 10, பிளஸ் 2, டிப்ளமோ, டிகிரியில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்ணுடன் படிப்பை முடித்திருக்க வேண்டும். 49.9 சதவீத மதிப்பெண் என்றாலும் கூட அவர்கள் விண்ணப்பம் செய்ய முடியாது.

இந்த பணிக்கு ரோட்டேஷனல் ஷிப்ட் இருக்கும். இதனால் எந்த ஷிப்ட்டாக இருந்தாலும் கூட பணியாற்ற தயாராக இருக்க வேண்டும். நைட்ஷிப்ட் இருக்கும். நைட்ஷிப்டிற்கு அலோவன்ஸ் தொகை உண்டு. கேப் வசதி உள்ளது. அலுவலகத்தில் இருந்து வீட்டுக்கும், வீட்டில் இருந்து அலுவலகத்துக்கும் கேப் வசதி செய்து தரப்படும். இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை, கோவை, பெங்களூர், ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

இந்த பணிகளுக்கு விண்ணப்பம் செய்ய ஜூலை 15ம் தேதி கடைசி நாளாகும். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் அன்றைய தேதிக்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பயன்படுத்தி விண்ணப்பம் செய்யலாம். இண்டர்வியூவுக்கு செல்வோர் ரெஸ்யூம் , பாஸ்போர்ட் சைஸ் போட்டோ வைத்திருக்க வேண்டும். கல்லூரி ஐடி கார்டு, பள்ளி, கல்லூரிக்கான மார்க் ஷீட் உள்ளிட்டவற்றை வைத்திருக்க வேண்டும். பார்ன் கார்டு இருக்க வேண்டும்.

பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+