டிகிரி முடித்தவரா நீங்க? Cognizant நிறுவனம் தரும் சூப்பர் வேலை.. சென்னை - கோவையில் பணி

Subscribe to Oneindia Tamil

சென்னை: காக்னிசண்ட் ஐடி நிறுவனத்தில் அனலிஸ்ட் டிரெய்னி (Analyst Trainee)பிரிவில் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இந்த பணிக்கு 2023, 2024ம் ஆண்டில் டிகிரி படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் செய்ய ஜூன் 30ம் தேதி கடைசி நாளாகும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை, கோவை, பெங்களூர், ஹைதராபாத் உள்பட 9 இடங்களில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

காக்னிசண்ட் ஐடி நிறுவனத்தில் தற்போது அனலிஸ்ட் டிரெய்னி (Analyst Trainee) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு 2023 அல்லது 2024ம் ஆண்டில் டிகிரி படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.

cognizant-off-campus-hiring-for-analyst-trainee-role-including-chennai-and-coimbatore-application-wi

குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் பிசிஏ, பிஎஸ்சி படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். இதில் பிஎஸ்சி என்றால் கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி (Allied Streams), கணிதம், இயற்பியல், வேதியியல், புள்ளியில், எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட படிப்புகளை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.

இவர்கள் 10, பிளஸ் 2, டிப்ளமோ, இளநிலை பட்டப்படிப்பு உள்ளிட்டவற்றில் 60 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். 59.9 சதவீத மதிப்பெண் பெற்றவர்கள் என்றால் விண்ணப்பம் செய்ய வேண்டும். டைம் மேனேஜ்மென்ட் ஸ்கில் இரு்க வேண்டும். ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். பிரச்சனையை தீர்க்கும் திறன், அனலிட்டிக்கல் ஸ்கில்ஸ், டீமாக சேர்ந்து பணியாற்றும் திறமை உள்ளிட்டவை இருக்க வேண்டும்.

தேர்வாகும் நபர்கள் மொத்தம் 9 இடங்களில் நியமனம் செய்யப்பட உள்ளனர். அதன்படி சென்னை, கோவை, பெங்களூர், ஹைதராபாத், கொல்கத்தா, புனே, கொச்சி, புவனேஸ்வர், இந்தூர் உள்ளிட்ட இடங்களில் நியமனம் செய்யப்பட உள்ளனர். இதில் எந்த இடத்தில் நியமனம் செய்யப்பட்டாலும் பணி செய்ய தயாராக இருக்க வேண்டும்.

தேர்வாகும் நபர்கள் எந்த ஷிப்ட்டாக இருந்தாலும் பணியாற்ற தயாராக இருக்க வேண்டும். இரவு பணிக்கு அலோவன்ஸ் வங்கப்படும். Cab வசதி உள்ளது. பிக்அப் - டிராப் வசதி தரப்படும். தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான சம்பளம் குறித்த விவரம் தெரிவிக்கப்படவில்லை. திறமையின் அடிப்படையில் சம்பளம் என்பது நிர்ணயம் செய்யப்பட உள்ளது.

தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் ஜூன் 30ம் தேதிக்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பயன்படுத்தி விண்ணப்பம் செய்யலாம். இண்டர்வியூவுக்கு செல்வோர் ரெஸ்யூம் , பாஸ்போர்ட் சைஸ் போட்டோ வைத்திருக்க வேண்டும். கல்லூரி ஐடி கார்டு, பள்ளி, கல்லூரிக்கான மார்க் ஷீட் உள்ளிட்டவற்றை வைத்திருக்க வேண்டும். பானன் கார்டு இருக்க வேண்டும்.

பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+