கோவை - சென்னையில் வேலை.. Cognizant-ல் ரூ.6.75 லட்சம் வரை சம்பளம்.. விண்ணப்ப தேதி நீட்டிப்பு
சென்னை: முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான காக்னிசண்ட்டில் இன்ஜினியரிங் முடித்தவரகளுக்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியானது. இதற்கான விண்ணப்ப தேதி என்பது இப்போது நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை, கோவையில் நியமனம் செய்யப்படவும் வாய்ப்புள்ளது. இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் மே 12ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும்.
முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான காக்னிசண்ட் (Cognizant) சார்பில் தொடர்ந்து பல்வேறு பிரிவுகளில் காலிப்பணியிடங்கள் என்பது நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் காக்னிசண்ட் சார்பில் தற்போது வெளியாகி உள்ள அறிவிப்பின் முக்கிய விபரங்கள் வருமாறு:

அதன்படி தற்போது காக்னிசண்ட் நிறுவனத்தில் இன்ஜினியரிங் கிராசூவேட்களுக்கான GenC Next, GenC and Gen C பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு ஆண்டுக்கு குறைந்தபட்சமாக ரூ.4 லட்சம் வழங்கப்படும். அதிகபட்சம் என்றால் ரூ.6.75 லட்சம் வரை சம்பளம் என்பது வழங்கப்படும். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோருக்கு முன்அனுபவம் என்பது தேவையில்லை. அதாவது 2025ம் ஆண்டில் பிஇ, பிடெக், எம்இ, எம்டெக் படிப்பை முடித்திருக்க வேண்டும். லெதர் டெக்னாலஜி, ஃபுட் டெக்னாலஜி, பேஷன் டெக்னாலஜி படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்ய முடியாது.
மற்றவர்கள் என்றால் 60 சதவீத மதிப்பெண்ணுடன் 10, பிளஸ் 2, டிப்ளமோ, யுஜி, பிஜி படிப்பை முடித்திருக்க வேண்டும். 59.9 சதவீத மதிப்பெண்ணுடன் படிப்பை முடித்தவர்களுக்கும், அரியர்ஸ் இருப்பவர்களுக்கும் அனுமதியில்லை. இந்த பணிக்கு Cognizant இணையதளம் வழியாக விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி என்பது இப்போது நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அதன்படி மே மாதம் 12ம் தேதி நள்ளிரவு 11.59 மணிக்குள் விண்ணப்பம் செய்யலாம்.
அதோடு விண்ணப்பதாரர்கள் எங்கு பணியமர்த்தப்பட்டாலும் அங்கு செல்ல தயாராக இருக்க வேண்டும். இந்த பணிக்கான விபரங்கள் அனைத்தும் Superset-ல் பதிவு செய்யப்படும் இ-மெயில் ஐடி மூலம் தான் தெரிவிக்கப்படும். இதனால் சொந்த மெயில் ஐடியை வழங்க வேண்டும். ஒருமுறை இ-மெயில் முகவரி கொடுத்த பிறகு அதனை மீண்டும் மாற்றம் செய்ய முடியாது. இதனால் கவனமாக சரியான இ-மெயில் முகவரியை கொடுக்க வேண்டும்.
இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் மொத்தம் 9 இடங்களில் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். இதில் தமிழகத்தை எடுத்து கொண்டால் சென்னை, கோவையில் உள்ள காக்னிசண்ட் நிறுவனத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர். இதுதவிர பெங்களூர், ஹைதராபாத், புனே, கொல்கத்தா, புவனேஸ்வர், இந்தூரில் செயல்பட்டு வரும் காக்னிசண்ட் நிறுவனங்களிலும் பணியமர்த்தப்பட உள்ளனர்.
இந்த பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications