கைநிறைய சம்பளம்.. Cognizant ஐடி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. விண்ணப்பம் செய்ய அசத்தலான வாய்ப்பு
பெங்களூர்: பெங்களூரில் செயல்பட்டு வரும் Cognizant ஐடி நிறுவனத்தில் பல்வேறு பணிகள் கைநிறைய சம்பளத்துடன் நிரப்பபப்பட உள்ளது. இந்த பணிக்கான படிப்பு உள்ளிட்ட விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் செயல்படும் வரும் முக்கிய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் Cognizant ஒன்றாகும். பெங்களூரில் செயல்பட்டு வரும் இந்த நிறுவனத்தில் தற்போது காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
இதுதொடர்பாக டிசம்பர் 2ம் தேதி அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ள முக்கிய தகவல்கள் வருமாறு:

காலியிடங்கள் என்ன?
Cognizant நிறுவனத்தில் Manager - Projects பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. விண்ணப்பத்தாரர்கள் வாடிக்கையாளர்களுடன் எளிதில் கலந்துரையாடும் திறன் கொண்டு இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பத்தார்களுக்கு தேவையான திறன்கள் பற்றிய முழுவிபரங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

கல்வி தகுதி என்ன?
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் மத்திய அல்லது மாநில அரசால் அங்கீகாரம் பெற்ற கல்லூரி அல்லது பல்கலைழக்கழகத்தில் படிப்பை முடித்திருக்க வேண்டும். அதன்படி விண்ணப்பத்தாரர்கள் பிஇ, பிடெக், எம்சிஏ படிப்புகளை கட்டாயம் முடித்திருக்க வேண்டும். விண்ணப்பம் செய்யும் நபர்கள் நேர்க்காணல் முறையில் தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளது. இந்த நேர்க்காணலுக்கான தேதி என்பது பின்னர் அறிவிப்பு செய்யப்படும்.

சம்பளம் என்ன?
இப்பணிக்கு தேர்வு செய்யும் நபர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் பற்றிய விபரம் வேலைவாய்ப்பு தொடர்பான அறிவிப்பில் இடம்பெறவில்லை. இருப்பினும் தகுதி, திறமையின் அடிப்படையில் நல்ல சம்பளம் வழங்கப்பட வாய்ப்புள்ளது. பெங்களூர் பணிக்கு தேர்வாகும் நபர்கள் Day Shift முறையில் தான் பணிக்கு செல்ல வேண்டும்.

விண்ணப்பம் செய்வது எப்படி?
தகுதி மற்றும் திறமை உள்ளவர்கள் Cognizant இணையதளம் சென்று பணி தொடர்பான அறிவிப்பை படித்து பார்த்து ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பம் செய்வதற்கான இறுதிநாள் இன்னும் நிர்ணயம் செய்யப்படவில்லை. இருப்பினும் விருப்பம் உள்ளவர்கள் முன்கூட்டியே விண்ணப்பம் செய்வது நல்லது.
பணி தொடர்பான அறிவிப்பை காண Click Here
பணிக்கு ஆன்லைன் விண்ணப்பம் செய்ய Click Here
-
டிசிஎஸ், இன்போசிஸ் தான் இப்படி என்றால்.. நீங்களுமா..? டெக் ஊழியர்கள் மொத்தமாக கைவிடப்பட்டனர்! -
மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் நெல்லையில் வேலை! 82 காலியிடங்கள்.. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு -
ஈரோடு மாவட்டத்தில் வேலைவாய்ப்பு.. 120 பணியிடங்கள்.. 12 ஆம் வகுப்பு தகுதி தான்! செம சான்ஸ் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications