சென்னை – கோவையில் குவிந்திருக்கும் ஐடி வேலை.. நாளை மறுநாள் வேலைவாய்ப்பு.. அழைக்கும் Cognizant

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை மற்றும் கோவையில் செயல்பட்டு வரும் காக்னிசண்ட் ஐடி நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கான இண்டர்வியூ ஆகஸ்ட் 29 ம் தேதி காலை 10 மணி முதல் மதியம 12.30 மணி வரை நடைபெற உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இந்த இண்டர்வியூவில் பங்கேற்கலாம்.

நம் நாட்டில் செயல்பட்டு வரும் காக்னிசண்ட் நிறுவனத்தில் இருந்து அடுத்தடுத்து புதிய வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் தற்போது சென்னை, கோவை உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

Cognizant

அதன்படி கோவையில் உள்ள காக்னிசண்ட் நிறுவனத்தில் இருந்து SPE, SME, TL Accounts Payable உள்ளிட்ட ரோலுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு Accounts Payable ஸ்கில்ஸ் இருப்பதோடு, சம்பந்தப்பட்ட பிரிவில் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் முதல் 9 ஆண்டுகள் வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

2வது SPE, SME, TL, TM Accounts Receiable பணிக்கு Accounts Receivable- Cash Appsand Billing ஸ்கில்ஸ் இருப்பதோடு 2 ஆண்டு முதல் 11 ஆண்டு அனுபவம் இருக்க வேண்டும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் கோவையில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

3வது SPE, SME - Accounts Receivable பணிக்கு AR Credit and Collections ஸ்கில்ஸ் இருப்பதோடு குறைந்தபட்சம் 2 ஆண்டு முதல் 6 ஆண்டுகள் வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். 4வது TL, TM - Accounts Receivable பணிக்கு AR Credit and Collections and Terminal Shared Services ஸ்கில்ஸ் இருப்பதோடு, 2 ஆண்டு முதல் 11 ஆண்டு வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். 5வது SPE, SME - Accounts Receivable பணிக்கு Terminal Shared Services ஸ்கில்ஸ் இருப்பதோடு 2 ஆண்டு முதல் 6 ஆண்டு வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். 3வது, 4வது மற்றும் 5வது பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

இந்த பணிகளுக்கான இண்டர்வியூ கோவை மற்றும் சென்னையில் நாளை காலை 10 மணி முதல் 12.30 மணி வரை நடைபெற உள்ளது. கோவையை பொறுத்தவரை இண்டர்வியூ என்பது Cognizant, CCC Campus, CHIL SEZ Campus, CHIL SEZ IT Park, Saravanampatti, Keeranatham Village, Coimbatore - 641 035 நடைபெற உள்ளது. அதேபோல் சென்னையில் இருந்து COG KITS Campus (CKC), SEZ Ave, Elcot SEZ, Sholinganallur, Chennai, Tamil Nadu - 600 119 என்ற முகவரியில் நடைபெற உள்ளது.

தற்போதைய அறிவிப்பில் பணிக்கான மாதசம்பளம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் நாளை மறுநாள் சென்னை - கோவையில் நடக்கும் இண்டர்வியூவில் பங்கேற்று பயன் பெறலாம்.

பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+