Cognizant வேலைவாய்ப்பு.. பிப்ரவரி 22ம் தேதி இண்டர்வியூ.. சூப்பர் சான்ஸை மிஸ் பண்ணாதீங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: முன்னணி ஐடி நிறுவனமான காக்னிசண்ட்டில் 12 வகையான SKills உள்ளவர்களுக்கு வரும் பிப்ரவரி 22ம் தேதி இண்டர்வியூ என்பது நடைபெற உள்ளது. இந்த அறிவிப்பின் முக்கிய விபரங்கள் வருமாறு:

தற்போது பலருக்கும் ஐடி நிறுவனங்களில் கால்பதித்து கைநிறைய சம்பளம் வாங்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. இதனால் கல்லூரியில் பிற துறைகளில் படித்து இருந்தாலும் கூட ஐடி துறை சார்ந்த படிப்புகளை தனியே படித்து இப்போது பல இளைஞர்கள் அந்த துறையை நோக்கி செல்கின்றனர்.

it jobs jobs job

நம் நாட்டிலும் நாளுக்கு நாள் புதிய ஐடி நிறுவனங்கள் உருவாகி வருகின்றனர். அதேபோல் பல முன்ணனி ஐடி நிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக காக்னிசண்ட் செயல்பட்டு வருகிறது. அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இந்த நிறுவனம் இயங்கி வருகிறது.

காக்னிசண்ட் சார்பில் தற்போது 12 வகையான Skills-யை கொண்டவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி Azure Databricks, Azure Data Factory, Snowflake, Bigdata, Python, DSA, IICS, Data Modelling, GCP, MDM, Data Stage, Tableau உள்ளிட்ட ஸ்கில்ஸ் உள்ளவர்கள் பணிக்கான இண்டர்வியூவில் பங்கேற்கலாம்.

குறிப்பாக இவர்களுக்கு சம்பந்தப்பட்ட பிரிவில் குறைந்தபட்சம் 4 ஆண்டு முதல் 12 ஆண்டு வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். இந்த பணிக்கான இண்டர்வியூ என்பது பிப்ரவரி 22ம் தேதி நடைபெற உள்ளது. இண்டர்வியூ என்பது Cognizant Technology Soutions, Plot 25, 26/27, ISB Rd, Financial District, Nanakramaguda, Telangana 500032 என்ற முகவரியில் இண்டர்வியூ என்பது நடைபெற உள்ளது.

இண்டர்வியூ நடைபெறும் நாளான பிப்ரவரி 22ம் தேதி முன்கூட்டியே அந்த முகவரிக்கு செல்வது நல்லது. அப்போது தான் கடைசி கட்ட பதற்றத்தை தவிர்க்கலாம். அதேபோல் இண்டர்வியூ என்பது Face to Face முறையில் நடைபெறும். இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் Resumes, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ உள்பட தேவையான பிற ஆவணங்களை வைத்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பணிக்கான சம்பளம் மற்றும் பணி நியமனம் செய்யப்படும் இடங்கள் பற்றிய விபரம் எதுவும் தற்போது தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்பட உள்ளது.

பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+