ரூ.43,000 மாதஊதியம்.. நோ எக்ஸாம்.. நேர்க்காணல் மட்டுமே.. கோவை ஆவினில் சூப்பர் வேலை!
கோவை: கோவை மாவட்ட ஆவினில் காலியாக உள்ள வெட்னரி கன்சல்டன்ட் பணிக்கு தேர்வு இன்றி இன்டர்வியூ முறையில் ரூ.43 ஆயிரம் சம்பளத்தில் ஆட்சேர்ப்பு நடத்தப்பட உள்ளது.
தமிழ்நாடு அரசு சார்பில் பால்வளத்துக்கு என்று தனித்துறை உள்ளது. இந்த துறையின் கட்டுப்பாட்டில் ஆவின் நிறுவனம் இயங்கி வருகிறது.

இந்நிலையில் தான் கோவை மாவட்ட ஆவினில் காலியாக உள்ள வெட்னரி கன்சல்டன்ட் பணிக்கு ஆட்சேர்ப்பு நடத்தப்பட உள்ளது. அதன் விபரம் வருமாறு:
கோவை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் யூனியன் லிமிடெட்டில் காலியாக உள்ள வெட்னரி கன்சல்டன் (கால்நடை ஆலோசகர்) பணியிடம் நிரப்பப்பட உள்ளது. இந்த பணிக்கு இளங்கலை வெட்னரி சயின்ஸ் & அனிமல் ஹஸ்பன்ட்ரி படிப்பை (B.V.Sc. & A.H) படித்திருப்பதோடு, கம்ப்யூட்டர் அறிவு பெற்றிருக்க வேண்டும். மேலும் ஓட்டுனர் உரிமம் பெற்று டூவீலர் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.
பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாத சம்பளமாக ரூ.30 ஆயிரம் வழங்கப்பட உள்ளது. மேலும் Transport செலவுக்காக ரூ.8 ஆயிரம், Incentives ஆக ரூ.5 ஆயிரம் வழங்கப்படும். இதன்மூலம் மாதசம்பளமாக ரூ.43 ஆயிரம் வரை கிடைக்கும். விண்ணப்பம் செய்வோர் 50 வயதுக்குள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பணிக்கு எழுத்து தேர்வு எதுவும் இல்லை. நேர்க்காணல் மட்டுமே உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் நேரடியாக நேர்க்காணலில் பங்கேற்கலாம். பணிக்கான நேர்க்காணல் என்பது New Dairy Complex, Pachaplayam, Kalampalayam (Po), Perur (Via), Coimbatore 641 0101 என்ற முகவரியில் வரும் நவம்பர் 28 ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.
இந்த அறிவிப்பின்படி Veterinary Consultant பணிக்கு ஒருவர் மட்டும் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இது ஒரு தற்காலிக பணியாகும். இவ்வாறு பணிக்கு தேர்வாகும் நபர்கள் 2024 ஜூலை 30ம் தேதி வரை பணியமர்த்தப்படுவார்கள். நேர்க்காணலுக்கு செல்வோர் தங்களின் பயோடேட்டா, சுயசான்றொப்பமிட்ட கல்வி சான்றிதழ்கள் உள்ளிட்டவற்றை வைத்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications